எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க வேட்பாளர் ஒருவர் காலி மதுப் பாட்டில்களை சேகரித்து விற்று, அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகையைக் கட்டியுள்ளார்! (வித்தியாசமான மனிதர்தான்!).

* சவப்பெட்டியில் படுத்தபடி வந்து இன்னொரு வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.

* சென்னை கோயம்பேடு அங்காடியில் ரசாயன கல்லில் பழுக்க வைத்த மூன்றரை டன் பழங்கள் பறிமுதல்!

* விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யாது; மாநில அரசுதான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி.

* மேனாள் எம்.பி.,க்களில் 80 சதவிகிதம் கோடீஸ்வரர்களாம் - அவர்களுக்கு ஏன் ஓய்வுப் பணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

* நாட்டில் உள்ள 30 சதவிகித நெசவாளர்களுக்குப் பள்ளிப் படிப்பு கிடையாது.

* ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ்நாட்டில் பி.ஜே.பி. காலூன்ற முயற்சிக்கிறது என்று அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா கூறுகிறார்.

* நடப்பு நிதியாண்டில் ரயில் மூலம் வருமானம் ரூ.1.17 லட்சம் கோடி.

* பொதுத் துறையைச் சேர்ந்த 13 வங்கிகளுக்கு 2016-2017 ஆம் ஆண்டுக்கு மூலதனமாக ரூ.1100 கோடியை மத்திய அரசு வழங்குகிறது.

* எழுத்தாளர் அசோகமித்ரன் (வயது 85) நேற்று மரணமடைந்தார்.

* சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 114 வேட்பு மனுக்கள் தாக்கல்.

* இறுதி துணை நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.479 கோடி ஒதுக்கப்படுவதாக தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தகவல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner