எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 127 மனுக்களில் 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

* ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 12 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டுமென தொழிலாளர் நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

* தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக ஏடிஜிபி எம்.என்.மஞ்சுநாதா நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

* கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 17 லட்சம் பேருக்கு காசநோய் இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய தெரிவித்துள்ளது.

* ரூ.5000, ரூ.10,000 நோட்டுகளை வெளியிடும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* அடையாறு பக்கிங்காம், கூவம் ஆறுகளை சீரமைக்க புதிய துறைகளை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* ஏர் இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.யை விமானத்தில் அனுமதிக்கத் தடை விதித்து விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

* சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மாற்றம் (ஒவ்வொரு தேர்தலின்போதும் இவர் மாற்றப்படுகிறார்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner