எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிருங்கேரி சங்கராச்சாரியார் தமிழ் நாட்டில் டேரா அடித்து ஆங்காங்கே சுற்றுப் பயணம் மேற் கொண்டு 'அருள்மொழி' களை உதித்துக் கொண்டு ஆசியும் வழங்கிக் கொண்டுள் ளார். அதில்  கடவுள் மறுப்பா ளர்கள் கூற்றுக்கும் கடவுளே காரணம் என்பது ஒன்று. அப்படி யென்றால் கடவுள் மறுப்பாளர் களைக் காய்ந்துக் குதறுவது ஏன்?

"ஆதி சங்கரர் 32 ஆண்டுகள் வாழ்ந்து எப்பேர்ப்பட்ட காரியங் களைச் செய்துள்ளார்? அவர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தே சென்று நாத்தி கர்களிடம் வாதம் செய்து அவர் களை ஆத்திகர்களாக்கினார்" என்று பேசியிருக்கிறார் சிருங் கேரியார் ('தினமணி' 23.3.2017).

இது என்னே முரண்பாடு? கடவுள் மறுப்பாளர்களுக்கும் கடவுள்தான் காரணம் என்று ஒரு பக்கத்தில் சொல்லி விட்டு, ஆதி சங்கரர் அவர்களைத் திருத்தினார் என்று சொல்லுவது - கடவுள் கட்டளைக்கு விரோதமாக ஆதி சங்கரர் நடந்து கொண்டார் என்று சொல்ல வருகிறாரா?

இதே ஆதி சங்கரர் பற்றி விவேகானந்தர் என்ன சொல் லுகிறார்? அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைக் கப்ப லேற்றி வந்தவராயிற்றே - அவர் சொன்னால் இந்து மதவாதிகள் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும். இதோ விவேகானந்தர் பேசுகிறார்:

"சுவாமி விவேகானந்தர்: சங் கரருடைய புத்தி நாவிதன் கத்தி யைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரி டத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகை யதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். இக் காலத்துத் தென்னிந்திய பிராம் மணப் புரோகித வகுப்பார்போல. அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட் டார் என்று எவ்வளவு வாதாடு கிறார்! அவர் காட்டும் நியாயங் களோ எவ்வளவு நகைப்புக் கிட மாகின்றன. விதுரன் பிரம்ம ஞானத்தை அடைந்தான்; அது முற்பிறவியிலே அவன் பிராம் மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால் என்கின்றார். நல்லது; இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தை யடைந்தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற் பிறப்பிலே பிராம்மணனா யிருந்த காரணத்தினால் அத் தகைய ஞானத்தை அடைந்தா னென்று சொல்ல வேண்டுமா? அய்யோ பாவம்!

சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயி ருந்தார் புத்தர்; "பஹுஜன ஹிதாய பஹுஜன ஸுகாய"  - பலருடைய இதத்திற்காகவும், பலருடைய நலத்திற்காகவும்  வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!" என்கிறார் விவேகானந்தர்.

புத்தரை ஆதி சங்கரரோடு ஒப்பிட்டு, புத்தரின் அகன்ற சிந்தையையும், ஆதி சங்கரரின்  அகன்ற நோக்கமில்லா அகந்தை யையும், பார்ப்பனக் கர்வத்தையும் அலசி அலசிக் கழுவி ஊத்தி விட்டாரே! விவேகானந்தர்.

பாவம் சிருங்கேரிகள்!

- மயிலாடன்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner