எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, மார்ச் 26 பொதுமக்களை அச்சுறுத்துதல் மற்றும் லஞ்சம் பெற்ற வர்கள் என்று கூறி நூற்றுக்கணக்கான காவல் துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த காவலர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் முதல்வரானதில் இருந்தே மாநிலமே காவித்தாலிபானாக தலை விரித்தாடுகிறது. முக்கியமாக சிறுபான் மையினரின் வாழ்வாதாரம் தொடர்ந்து பறிக்கப்பட்டு  வருகிறது. முதலில் சட்டவிரோத மாட்டிறைச்சிக் கடை களும் மூடல் என்ற உத்தரவின் பேரில் மாட்டிறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து சுகாதாரப் பிரச்சினைகளைக் கூறி ஆட்டிறைச்சி, கோழி மற்றும் மீன் கடைகள் மூடப் பட்டன. இந்த நிலையில் இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள சிறுபான்மையினரின் வியாபார மய்யங் கள் இந்து அமைப்பினரால் முற்று கைக்கு ஆளாகிவருகிற தகவல்களை "அமர் உஜாலா" என்ற இந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அஸ்ரத் நகரில் மீன் கடைகள், கோழி மற்றும் ஆட்டிறைச்சிக்கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதைக் காரணமாகக் கூறி உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக அமலாக்கம் செய்யப் படவில்லை எனக்கூறி 100க்கும் அதிக மான காவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறுபான்மையினரின் வாழ்வா தாரமான வியாபாரத்தளங்களை மூட வற்புறுத்துவது, பொருட்களை சேதப் படுத்தி அவர்களை முடக்கி வைக்கும் வேலைகளை காவிகுண்டர்கள் ஒரு புறம் அரங்கேற்றி வருகின்ற அதே நேரத்தில் மற்றொரு புறத்தில் அரசுப் பணியில் இருக்கும் சிறுபான்மையினர் கள்மீது ஊழல், நன்னடத்தை சீர்கேடு போன்ற பல்வேறு குற்றங்களைச் சுமத்திப் பணியிடை நீக்கம் செய்யப் பட்டு வருகின்றனர்.

காசியாபாத், மீரட், நொய்டா, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் இந்த நடவடிக்கைக்குப் பலர் பலியாகி யுள்ளனர். இவர்களில் பெரும்பாலான வர்கள் காவலர்களாகும். இஸ்லாமி யர்கள் அதிகம் வாழும் தலைநகர் லக் னோவில் மட்டும் 7 காவல்துறை உயரதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட் டுள்ளனர்.  இருப்பினும் இவர்கள் பணிக்காலத்தில் லக்னோவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு சலு கைகள் வழங்கினர் என்று கூறி  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner