எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெரம்பலூர், மார்ச்.26- பெரம் பலூரில் மூடநம்பிக்கையால் பில்லி சூன்யம் எடுப்பது, மாந்தீரிகம் செய்வது என்று இறந்த மனித உடலை வைத்து பூசைகள் செய்தததாக கார்த்தி என்பவனை பெரம்பலூர் காவல் துறையினர் கைது செய்தார்கள். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட Ôமந்திரவாதிÕ கார்த்திமீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலக பின்புறத்தில் உள்ள எம்.எம்.நகரில் ஒரு வீட்டிலிருந்து துர் நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு, கடந்த சில வாரத் துக்கு முன் தகவல் வந்தது. இதை யடுத்து, காவல்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது, பில்லி சூனியம் கற்றுக்கொடுப்பதற்காக வீட் டில் பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி வைத்திருந்து மாந் தீரிகம் செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புகாரின் பெயரில் மந்திரவாதி கார்த்திக் உள்பட நான்கு பேரை கைது செய்து பெண் சடலம் எப்படி வந்தது, யார் இந்த பெண், என்ற பல கோணத்தில் காவல் துறை யினர் விசாரணை நடத்தினர்.

இதில் வெளிவந்த தகவல் கள் அனைத்தும் அதிர்ச்சி தருப வையாக இருந்தன. இதை யடுத்து, அந்த மந்திரவாதி கார்த்தி, தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளான். இவன் கடந்த ஆண்டு,  மரத்தடியில் மனித மூளைகள் மற்றும் எலும்புக் கூடுகளை வைத்து மாந்திரிகம் செய்து மூடநம்பிக்கை வியா பாரம் செய்து வந்தவன்.

இந்நிலையில், மந்திரவாதி கார்த்தியை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பரிந் துரையின்பேரில் குண்டர் சட் டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் உத்தர விட்டுள்ளார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்தியசிறையில் உள்ள கார்த்தி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளான். குண் டர் சட்டத்தின்படி, இடையில் பிணையில் விடப்படாமல், ஓராண்டு கட்டாயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner