எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, மார்ச் 26 கர்நாடகாவில் உள்ள இந்து கோயில் திருவிழாக்களில் நடத் தப்படும் மூடச்செயல்களால் அப்பாவி பக்தர்கள் பலியாகி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மண் டியா, ஹாசன், கார்வார், தாவ ணகெரே, பீதர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் சமூக, பொரு ளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளன. இங்குள்ள இந்து கோயில்களில் தேர்த் திருவிழாவின்போது சிதி என்ற மூடச்செயல் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கொருமுறை நடத்தப் படும் இந்த மூடச்செயலில் தலித் மக்கள் மட்டுமே ஈடு படுத்தப்படுகிறார்கள்.

இந்த மூடச்செயலின்போது காலை 4 மணிக்கு ஆண்கள், பெண்களின் வாயில் இரும்பு கொக்கி (அலகு குத்துவது போல) குத்தப்படும். ஆண் டுக்கு 10 முதல் 20 ஆண்களின் முதுகில் 4 இரும்பு கொக்கி களால் குத்தி (வான் அலகு அல்லது கருடவாகனஅலகு போல) 20 முதல் 30 அடி உய ரத்தில் தொங்கும் மரக்கம்பத் தில் மாட்டுவார்கள். பிறகு மரத்தின் இன்னொரு பாகத்தை ராட்டினம் போல சுழற்று வார்கள். ஆண்களும் பெண் களும் ரத்தம் வடியும் நிலையில் 30 முறை கோயிலை சுற்றி வர வேண்டும்.

மிகவும் ஆபத்தான இந்த நிகழ்வின்போது பல ஆண்கள் கீழே விழுந்து உயிர் பலியாகி உள்ளனர். பலர் கை, கால் முறிந்து அவதிப்பட்டு வருகி றார்கள். ஹாசன்மாவட்டம், ஹொளெநர் சிப்பூர் அருகே யுள்ள ஹரிஹரபூரில் உடுச லம்மா (துர்கா பரமேஷ்வரி) கோயில் உள்ளது. இங்கு கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயில் தேர் திருவிழா நடை பெற்றது.

வெள்ளிக்கிழமை அதி காலை 4 மணிக்கு திருவிழா தொடங்கியபோது கோயில் பூசாரி 70 -க்கும் மேற்பட்ட மக் களுக்கு அலகுகுத்திவிட்டார். இதையடுத்து ஆண்களும், பெண்களும் உடுசலம்மா கோயிலையும் ஊரையும் சுற்றி வலம் வந்தனர். பிற்பகல் 2 மணியளவில் இந்த மூடச் செயல் தொடங்கியது. இரு நாட்களும் தலா 12 ஆண்கள் வீதம் முதுகில் இரும்பு கொக் கிகள் மாட்டப்பட்டு மரக்கம் பத்தில் தொங்கவிடப்பட் டார்கள். அந்த கம்பத்தை ராட் டினம் போல சுழற்றியபோது, கீழே இருந்த பெண்கள் குலவையிட்டனர். தலா 5 முதல் 10 நிமிடங்கள் சுழற்றிய பிறகு, அவர்கள் கீழே இறக்கப் பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டனர். இந்த ஆண்டு பாதுகாப்புக்காக இந்த மூடச் செயலில் ஈடுபடுத்தப்பட்ட ஆண்களின் கால்கள் மரக்கம்பத் தோடு இணைத்து கட்டப் பட்டது.

தலித் அமைப்பினர் போராட்டம்

இந்நிலையில் தலித் விடுதலை அமைப்பினர் இந்த மூடச்செயலிற்கு எதிர்ப்பு தெரிவித்துஹரிஹரபூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தின ரும் பங்கேற்றனர். அப்போது இந்த மூடச்செயலிற்கு தடை விதிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பர பரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner