எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டில்லி, மார்ச். 25 டில்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் Ôஞான சங்கம்Õ என்கிற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ்.  கருத்தரங்கு பயிற்சி முகாமை நடத்து கிறது. இக்கல்லூரி டில்லி பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கிவரும் கல்லூரி யாகும். டில்லி பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் சார்பில் Ôஞான சங்கம்Õ எனும் தலைப்பில் மார்ச் 25,26 ஆகிய இரு நாள்களில் நடத்தப்படுகின்ற கருத்தரங்கில்  Ôகாலனிய வழிமுறைÕ களை பின்னுக்குத் தள்ளி, Ôநாட்டின் மதிப்புகளைÕ மாணவர்களிடையே புகுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது.

கருத்தரங்கில் நாடுமுழுவதுமிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணி யாற்றக்கூடியவர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றக் கூடியவர்களுமாக உள்ள நூற்றுக் கணக்கான ஆசிரியர்களிடம் ஆர்.எஸ்.எஸ்-. தலைவர் மோகன் பகவத் சில பாடப்புத்தகங்களை அளிக்கிறார்.

கருத்தரங்கத்தில் உரையாற்றுவோ ரில் ஆர்.எஸ்-எஸ்- தலைவர் மோகன் பகவத், இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் உள்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

காலனித்துவ மதிப்புகளைக்கடந்து, தேசிய மதிப்புகளை புகுத்தக்கூடிய இலவசக் கல்வி முறையை   உள்ளடக்க மாகக் கொண்டிருக்கவேண்டும் என் பதே கருத்தரங்க¤ன் மய்யக்கருத்து என்று ஆர்.எஸ்.-எஸ். தரப்பு கூறுகிறது.மேலும் கருத்தரங்கின் நோக்கமாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் பேசியவர் கூறியதாவது:

"இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக் கும் மேலாக பழைமையான கல்வி முறையையும், கல்வி மய்யங்களையும் அந்நிய சக்திகள் ஒழித்துவிட்டன. நம் முடைய நூலகங்களை எரித்துவிட் டார்கள். பழைமைவாய்ந்த நம்முடைய அறிவாற்றலை இழிவுபடுத்தினார்கள். ஒரு பக்கத்தில் துருக்கியர்களும், முகலாயர்களும் ஆக்கிரமிப்பாளர்களாக நாட்டில் நுழைந்து கோயில்களை அழித்தார்கள். ஆங்கிலேயர்கள் கல்வி முறையை நிலைநிறுத்தியதால், இந்திய கல்வி முறைமீதான நம்பிக்கையை இழக்கச் செய்தார்கள்.

இந்தியாவை Ôசமூகம் மற்றும் அறிவில்Õ வளர்க்க வேண்டுமானால், இது போன்ற நோக்கத்தை இன்றைய தலை முறையினருக்கு அளித்தால்தான் அவர் களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடி யும். காலனித்துவ மதிப்பீடுகளிலிருந்து விலக்கி, மாணவர்களிடம் தேசிய மதிப் பீடுகளை நிலைநிறுத்திட வேண்டும்.

அரசியல் அறிவியல், பன்னாட்டு உறவுகள், வரலாறு, தொல்பொருளியல், அறிவியல், சமூகவியல், தொடர்புகள், கலை, இலக்கியம் மற்றும் பொருளா தாரம் போன்ற பாடங்கள்குறித்து கருத் தரங்கில் விவாதங்கள் நடைபெறுகின்றன’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner