எழுத்துரு அளவு Larger Font Smaller Font

*செல்லிடைப்பேசி இணைப்பிற்கு ஆதார் அட்டை கட்டாயம்.

*2012ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 5293 குழந்தைகள் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர். (3679 பெண் குழந்தைகள், 1170 ஆண் குழந்தைகள். வெளி நாடுகளுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் 444)

*நூறு நாள் வேலைத் திட்டத்தில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடுந் திட்டமும் இணைப்பு.

*திருப்பதி கோயிலில் ரூ.50 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் - மாற்ற வாய்ப்பின்றித் தவிப்பு! (ஏழுமலையார் கிருபையோ!)

*ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் பணிக்காக 1744 ஆசிரியர்களுக்குப் பயிற்சி.

*மீத்தேன் திட்டத்துக்கு மீண்டும் அனுமதி கொடுத்ததற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம்!

*வேலூர், சேலம், கரூர், பரமத்தி, தருமபுரி, திருச்சி, கோவை, பாளையங்கோட்டை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் நேற்று வெப்பம் 100 டிகிரி பாரன்  ஹீட்டைத் தாண்டின.

*ஓடும் இரயிலில் சீக்கியப் பெண்  அமெரிக்கர் ஒருவரால் அவமதிக்கப்பட்டார் (டிரம்ப் உபயம்!)

*பிரபல வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி (94) மருத்துவமனையில் அனுமதி.

*தமிழ்நாடு மின் வாரியம் ரூ.500 கோடி கடன் வாங்குகிறது.

*மார்ச்சு 25 முதல் ஏப்ரல் 1 வரை வங்கிப் பணிகள் விடுமுறையின்றி நடைபெற உத்தரவு.

*ரூ.2000 நோட்டுகளைப் பதுக்கினால் செயற்கைக்கோளில் கண்காணிக்கலாமாம்.

*இந்து வெறியர் - உ.பி. முதல் அமைச்சரை ஷியா முஸ்லிம் தலைவர்கள் சந்தித்தனர். (அச்சம் காரணமோ!)

*உ.பி.யில் இறைச்சி விற்பனையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம். (ஆர்.எஸ்.எஸ்.காரரும், உ.பி. முதல் அமைச்சருமான யோகி ஆதித்யநாத்தின் கைங்கர்யம்!)

*வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிடாதது ஏன்? என்று சி.பி.எம். கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner