எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கரூரில் போக்குவரத்துத் துறை பணிமனை (கும்பகோணம் லிமிடெட்) மண்டல அலுவலகத்தின் வளாகம் முன் போக்குவரத்து ஊழியர்கள் 1,200 பேர் தங்களது ஒரு நாள் ஊதியத்தை கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக ‘‘பால விநாயகர் கோயில்’’ கட்ட ஆரம்ப வேலையைக் கண்டு, கரூர் மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் போக்குவரத்துத் துறை மண்டல மேலாளர் அவர்களிடம் புகார் மனுவை கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஒத்த கருத்துடையோர், தமிழ் ஆர்வலர்கள், மாவட்ட திராவிடர் கழகத்தினர் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் நடப்பதைத் தவிர்க்க மண்டல மேலாளர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் உடனடியாக, சட்ட விரோதமாக செயல்படும் நபர்கள் மீதுநடவடிக்கை எடுத்தும், அரசுத்துறை வளாகத்தில் எந்த மத வழிபாட்டுத் தலங்களையும் கட்டக்கூடாது என்ற அரசாணையை மதித்து ‘‘வேலியே பயிரை மேயலாமா?’’ என்பதற்கொப்ப மத சார்பின்மையை காக்கவேண்டும். இல்லையேல், சட்ட ரீதியான நடவடிக்கையே! என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner