எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஸ்காட்லாந்தில் மீண்டும்
பொது வாக்கெடுப்பு நடத்த  அனுமதி

லண்டன், மார்ச் 29 பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ஓர் அங்கமாக உள்ள ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. இதுதொடர்பாக 2014-ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து 55 சதவீத மக்கள் வாக்களித்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இதனையடுத்து, பிரிட்டனில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக செயல்படும் வகையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து அரசு மீண்டும் முடிவு செய்தது. இதற்காக நாடாளுமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்துடன் பேச்சு வார்த்தையை பிரதமர் நிகோலா ஸ்டர்ஜியன் தொடங்கு வதற்காக தீர்மானத்திற்கு அந்நாட்டு எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அய்ரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்காக நடவடிக்கையை பிரிட்டன் மேற்கொண்டு வரும் நிலையில், பிரிட்டனில் இருந்து பிரிய ஸ்காட்லாந்து முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவை தாக்கியது டெபி புயல்  

குயின்ஸ்லாந்து, மார்ச் 29 ஆஸ்திரேலியாவை “டெபி புயல்” என அழைக்கப்படும் படு பயங்கரப் புயல் இன்று தாக்கி வருகிறது. இந்த புயலின் போது காற்றானது 300கி.மீ வேகத்தில் வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ஆஸ்திரே லியாவின் குயின்ஸ்லாந்து, ஏர்லி கடற்கரை, ஹாமில்டன் தீவு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் தாக்கும் இடங்களிலுள்ள மக்களை அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த புயலானது இன்று கரையை கடக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு நான்காம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. இதனால் அங்குள்ளா முக்கிய நிறுவனங்கள் காலவரையின்றி விடுமுறை அளித்துள்ளனர். மேலும் முக்கிய விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner