எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மாநில, மத்திய அரசுகளின் ஆணைப்படி பொது இடங்களிலோ, அரசு வளாகங்களுக்குள்ளோ எந்த மதச் சின்னங்களும், கோவில்களும் அமைக்கக் கூடாது. ஆனால், கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப் பட்டணத்தில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்துக்குள் (றிபிசி) பிள்ளையார் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது அரசு விதிகளுக்கு விரோதம் என்று கிருட்டிணகிரி மாவட்டத் திராவிடர் கழக செயலாளர் திராவிடமணி மற்றும் கழகப் பொறுப்பாளர்களால் ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளிடம் எழுத்துமூலம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழகத்தின் சட்ட நடவடிக்கையை எதிர்த்து பொது மக்கள் என்ற போர்வையில் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அச்சகத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. துண்டறிக்கையில் சில தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மிரட்டும் பாணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அச்சகப் பெயரில்லாமல் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

சட்ட விரோதத்தை தடுத்து நிறுத்துமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner