எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அபுதாபி, மார்ச் 30 மனித மூளை யுடன் கணினியை இணைக்கும் துணிகர முயற்சியை எடுக்கப் போவதாக எலான் மஸ்க் அறி வித்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடை பெற்றுவரும்நிலையில்,மனித மூளையுடன்இணைந்துசெயல் படும் சாதனங்களை நியூரா லின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூரா லின்க் உருவாக்கும் சாதனங்கள்மனிதர்களைமென் பொருள்களுடன் இணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை மேம்படுத்தும். மேலும் இவற்றை கொண்டு மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து,கம்ப்யூட்டர் சாத னங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முடியும். இது குறித்து சமீபத்தில் ட்விட் டர் மூலம் பதிலளித்த எலான் மஸ்க், நியூரா லேஸ் எனும் வழிமுறை சார்ந்து பணிகள் நடைபெற்றுவருகிறது.இந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்தி மனிதர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள முடி யும். தற்சமயம் மருத்துவ முறைகளில் எலக்டிரோடு அரே மற்றும் இம்ப்லான்ட்கள் மூலம் பல்வேறு நோய்கள் சரி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும் இவை உலகம் முழுக்க சிலருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை மிகவும் அபாயகரமானது என்பதால் இதன் பயன்பாடு அளவு மிகவும் குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் உருவாக்கும் நியூரோலின்க் நிறுவனத்தின் திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்நிறுவனம் மனிதர்களை கணினிகளுடன் இணைந்துசெயல்படவைக் கும்வழிமுறைகளைஎளிமை யாக்கி,அவற்றில்இருக்கும் அபாயத்தை வெகுவாக குறைக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner