எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜோதிடர்கள் தேர்தல் முடிவுகளைக் கணித்து வெளியிடக்கூடாது

தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

மும்பை, மார்ச் 31 தேர்தல் முடிவுகளை கணித்து வெளியிடக்கூடாது என ஜோதிடர் களுக்குத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலின் போது, வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் செய்திதாள், தொலைக்காட்சிகளில்கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட் டிருந்தது. அதுபோல வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக் கணிப்போ, ஆய்வோ நடத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தடை செய்திருந்தது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மதிக்கப்படாமல்,  முதற்கட்ட வாக்குப்பதிவுநடைபெறும்போதேபல் வேறுசெய்திதொலைக்காட்சிகள்,ஜோதி டர்களை அழைத்து வேட்பாளர் ராசி கள், ஜாதகம், கிரக பலாபலன்கள் போன்ற வற்றைக்கணித்துவெற்றிதோல்விகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.அவர்களே தேர்தல் முடிவுகளையும் கருத்துக் கணிப் புக்களாகவெளியிட்டுக் கொண்டிருந்தனர். தேர்தல்கருத்துக்கணிப்புகளை வெளி யிடவேண்டாம் என்ற தேர் தல் ஆணையத் தில் எச்சரிக்கை மீறிய இந்தச் செயல் தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சிஅடையச் செய்தது.

இதற்குக் காரணமாக செய்தி தொலைக் காட்சிகள் கூறியதாவது:

மக்களிடையே நேரடி கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடத்தான் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளதே தவிர, ஜோதிடர்களைக் கொண்டு கருத் துக் கணிப்புகளை வெளியிட தடை விதிக்கவில்லை என்று கூறியிருந்தன.

ஜோதிடர்களைக் கொண்டு...

இதையடுத்து, ஜோதிடர்களை கொண் டும் கருத்து கணிப்பு வெளியிட தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனை அடுத்து தேர்தல் ஆணையம் புதிய விதிகளையும், கட்டுப்பாடுகளையும் பிறப்பித்துள்ளது. அதில் தேர்தலின்போது, கருத்துக் கணிப்புக்குத் தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டத்துக்குப் புறம்பானது என்றும், மீறும்   நிறுவனங்கள், ஊட கங்கள் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த அய்ந்து மாநில தேர் தல்களில் 7 கட்டமாக நடைபெற்ற உத்தரப் பிரதேச தேர்தலில் ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு முடிந்ததுமே வாக்குப் பதிவு நடந்த தொகுதி வேட்பாளர்களின் ஜாதகங்களை வைத்துக் கொண்டு சில இந்தி செய்தி நிறுவனங்கள் ஜோதிடர்களை அழைத்து விவாதம் நடத்தியிருந்தது. இந்த விவாதத்தின் ஊடே அடுத்த கட்ட வாக்குப் பதிவின்போது யாருக்கு வாக்களித்தால் நாட்டிற்கு நன்மை கிடைக்கும்? இந்தக் கட்சிக்கு எதிராக வாக்களித்தால் சனியின் பார்வை பட்டுவிடும்.  குறிப்பிட்ட கட்சி யின் புனித சின்னத்திற்கு மதிப்பளித்து வாக்களிக்கும்போது குரு திசை பட்டு நாட்டில் பல நன்மைகள் நடக்கும் என்றும் விவாத நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த விவாத நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்கக் கூறியபோது, நாங்கள் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி முடிவைகளை அறிவிக்கவில்லை, ஜோதிடர்களைக் கொண்டுதான் விவாதம் நடத்தினோம்; இதை நம்புவதும், நம் பாததும் அவரவவர் விருப்பம் என்றும், தேர்தல் ஆணையம் ஜோதிடர்களை வைத்து கருத்துகணிப்புகளை வெளியிட தடை ஒன்றும் விதிக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சி நிறு வனங்கள் சாமர்த்தியமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் மிகச் சரியாக இப்படியொரு ஆணையைப் பிறப்பித்துள்ளது;

சபாஷ், இது சரியான அறிவிப்புதான்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner