எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நெல்லை, ஏப். 1- மத்திய அரசு நடத்திய இரயில்வே, அஞ்சல் துறைகளுக்கான வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. இதனை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தீர்வு காணப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நெல்லையில் வியாழனன்று (30.3.2017) செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

செய்தியாளர்: டில்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருவது குறித்து...?

தமிழர் தலைவர்: தமிழ்நாட்டை வறட்சி மாநிலம் என்று அறிவிக்க எங்களைப்போன்றவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னாலிருந்தே அரசை வலியுறுத்தி வந்தோம். திமுக போன்ற எதிர்க்கட்சிகளும் வலியுறுத் தின. இடதுசாரிகளும் வலியுறுத்தினார்கள்.

அனைத்து முற்போக்கு இயக்கங்களும் வலியுறுத்திய நிலையிலே, அனைத்து மாவட்டங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று சொன்னபிற்பாடும்கூட, விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடியோ, அல்லது விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்தி, அவர் களுக்கு புது நம்பிக் கையை ஊட்டக்கூடிய வகையிலோ, எதையுமே மத்திய அரசு முன்வந்து செய்யவில்லை.

உத்தரப்பிரதேசத் தேர்தலிலே வெற்றி பெற வேண்டு மானால் மாத்திரம், விவசாயிகளின் கடனை ரத்து செய்வோம் என்று சொல்கிறார்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகு, இப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்திலே விவசாயிகள் கடன் ரத்து என்பதெல்லாம் கிடையாது, செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே சொல்கிறார்.

விவசாயிகள் கோவணம் கட்டிப் போராட்டம், எலியைத் தின்னும் போராட்டம் என்று இவையெல்லாம் வந்தாலும், அவர்கள் ஏன் மத்திய அரசுக்கு எதிராக செய்கிறார்கள்? என்று சொல்லுகிறார்கள்.

மத்திய அரசுதான் இப்போது மாநில அரசுக்கு நிதியை வழங்க வேண்டிய ஒரு சூழல் உள்ளது. நம்முடைய தமிழ்நாட்டைப் பொருத்தவரையிலே இது நிரம்ப பரிதாபகரமாக இருக்கிறது. இங்கே எல்லாமே பொறுப்பு கவர்மென்ட்டுதான். பொறுப்பு தலைமை நீதிபதி, அதேபோல ஆட்சியும் பொறுப்பு ஆட்சி என்பது போல இருக்கிறது என்றுதான் மத்திய அரசு நினைக்கிறது போலும்.

அதனால்தான்,நீட்தேர்வுக்குஇங்கேசட்டமன்றத் திலே எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எல்லாக்கட்சிகளும் இணைந்தும், நமக்குரிய சட்டப்படி, அரசமைப்புச் சட்டப்படி உள்ள உரிமையை கவனிக்கமாட்டோம் என்று சொல் கிறார்கள்.

அதுபோல, விவசாயிகள், நெடுவாசல் போன்ற இடங் களிலே ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் எங்களின் அடிப்படை நீராதாரம், வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்று சொல்லி, அவர்கள் உண்ணாநிலை முதற்கொண்டு எல்லாப் போராட்டங்களிலும் இணைந்து கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் எல்லாம் செய்யக் கூடிய நிலையிலே, அதைத் தடுத்து நிறுத்துவது எப்படி, அதைத் தவிர்ப்பது எப்படி என்று அந்த நேரத்திலே சொல்லி விட்டு, இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்பந்தம் போடுகிறோம் என்று சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இணையமைச்சர் பொன்னப்பனார் என்ன சொல்கிறார்? ஒப்பந்தம் போட்டால், அதைப்பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொல்கிறார்.

எனவே, விவசாயிகளிடம் நம்பிக்கையை ஊட்டக் கூடிய அளவுக்கு மத்திய அரசோ அல்லது தற்போதுள்ள மாநில அரசோ இல்லை.

பட்ஜெட் விவாதம் மூன்றே நாளில் முடிந்துவிட்டது. அதில் கூடுதல் நிதி செயலாளராக இருக்கக்கூடிய தலைமைச் செயலாளர் சொல்கிறார், மத்திய அரசின் திட்டங்களை நாங்கள் செய்து, அதற்கு பணப்பட்டுவாடா செய்திருக்கிறோம். அந்தப்பணத்தை, பாக்கியை மத்திய அரசு கொடுக்கவேண்டும். அதனால்தான் எங்களுக்கு வருவாய் பற்றாக்குறை ஏராளமாக இருக் கிறது. கொடுக்கமாட்டேன் என்று சொல்லு கிறார்கள் என்று இத்தனையையும் சொல்லுகிறார்கள்.

கவலைப்படாத மத்திய அரசு

எனவே,இந்தநிலையிலே,மத்தியஅரசுஅலட்சி யமாகஇருப்பதுமட்டுமல்ல,கொஞ்சங்கூட கவலைப்பட்டதாக, தமிழ்நாட்டின் எந்தப் பிரச்சி னையிலும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையாக இருந்தாலும், அல்லது பக்கத்து மாநிலங்கள் அணைகள் கட்டுவது, அணையை உயர்த்துவது இதுபோன்ற பிரச்சினைகளாக இருந்தாலும், கொஞ்சங்கூட இங்கே ஓர் அரசு இருக்கிறது என்று நினைக்காமல், இப்போது ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது, எப்படியோ நடந்துகொண்டிருக்கிறது என்று மிக அலட் சியத் தோடு நடந்துகொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியின் கையிலே ஏறத்தாழ நாடாளுமன்றத்தில் இரு அவை களிலும் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அப்படி இருந்து என்ன பயன்? என்ன பலன்? நன்றாக நினைத்துப்பார்க்கவேண்டும்.

எனவேதான், மக்கள் பிரச்சினையிலே, மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டியாகவேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்தப்பிரச்சினைகள் உள்பட எல்லாவற்றையும் சேர்த்து, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு  என்ற ஓரியக்கத்தை திராவிடர் கழகம் கடந்த 27ஆம் தேதி திமுக, காங்கிரசு, இந்திய யூனியன் முசுலீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்ற ஒத்தக் கருத் துள்ளவர்கள், இசுலாமிய அமைப்புகள், சமூக நீதி சார்ந்த அமைப்புகள் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து திரண்டு ஒரு கருத்தை உருவாக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் இயக்கமாக இதை நடத்தி, விழிப்புணர்வை உண்டாக்கினால் ஒழிய, இரண்டு அரசுகளின் மூலமாக எந்தவிதமான தீர்வையும் உடனடியாகப் பெறக் கூடிய சூழல் இல்லை என்பதை வருத்தத்தோடு, கண்டனத் துக்குரிய சூழல் இன்றைக்கு இருக்கிறது.

தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகளுடைய செயல்பாடு என்பது, அவர்கள் எக்கேடு கெட்டாலும் போகட்டும், எத்தனை பேர் வேண்டுமானாலும் சாகட் டும், அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல¢லை என்று வெளிப்படையாகச் சொல்லக்கூடிய அவலம் இருக்கிறது.

ஆனால், இங்கிருந்து வாக்குகள் தேவை. நம்முடைய வரிப்பணமெல்லாம் தேவை. இப்போது ஜிஎஸ்டி என்று வரும்போது இன்னும் அதிகமான அளவுக்கு வரி உயருகிறது. முன்புமாதிரி திட்டக்கமிஷன் என்பது கிடையாது. நிதி ஆயோக் என்று அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறார்களோ, அவர்களைத்தான் நம்பிக் கொண்டிருக்க வேண்டும்.

எனவே, ஒரு வழிப்பாதை மாதிரி, வருமானம் நம்மிட மிருந்து போகும், நாம் செலவழிப்பதற்கு டில்லியிடம் பிச்சாந் தேகி, மடிப்பிச்சையேந்தவேண்டிய நிலை இருக் கிறது. இது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது.

செய்தியாளர்: தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி போது மான தல்ல என்று கூறப்படுகிறதே?

தமிழர் தலைவர்: அதாவது யானைப்பசிக்கு சோளப் பொரி என பழமொழி உண்டு. வறட்சி நிவாரணம் உள்பட தமிழக அரசு கேட்டது ரூபாய் 30,565 கோடி தொகையை கேட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒதுக்கியது ரூ.1,748.28 கோடி. அதுமட்டுமல்ல, வர்தா புயல் நிவாரணத்தில் ஒன்றுமே கொடுக்கவில்லை.

மத்திய அரசு யாருடைய பணத்தைக் கொடுக்கிறது? மாநிலத்திலிருந்துதான் வருவாய் போகிறது. ஜிஎஸ்டி வந்த பிற்பாடு, விற்பனை வரி போன்ற கொஞ்சநஞ்ச பிடிப்புகளும் அதிலே அகன்றது.

அதனால்தான்ஜெயலலிதாபோன்றவர்கள்சுலப மாக ஜிஎஸ்டிக்கு அனுமதி கொடுக்காமல் இருந்தார்கள். எங்களுக்கு அவரிடையே கருத்து மாறுபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால், அவர் எதையெல்லாம் நிறுத்திவைத்திருந்தாரோ, அதேபோல, உணவுப்பொருள் பிரச்சினையில் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து வருகின்றபோது, பொது வழங்கு துறையில் அரிசி விலையை பல மடங்கு ஏற்றிவிட்டார்கள். மத்திய அரசிடமிருந்து பணம் வரவில்லை என்பது மட்டுமல்ல, ஒரு கிலோ எட்டு ரூபாய் என்பதில் 21 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மாநில அரசு கொடுக்க வேண்டிவரும்? கூடுதல் சுமை வரும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.

எதைப்பற்றியும் கவலைப்படவில்லை, நான்கு லட்சம் கோடி கடன் இருக்கிறது. நம் ஒவ்வொருவரின் தலையிலும் கடன் இருக்கிறது. ஓவர் டிராஃப்ட் என்று  மூழ்கிப்போகிற அளவுக்கு இருக்கிறது. இந்த நிலை எங்கே போய் சேரும்? மக்களிடையே விழிப்புணர்வை ஒத்த கருத்துள்ளவர்கள் ஏற்படுத்தவேண்டும். இதுதான் சரியான நேரம் என்று சொல்லக்கூடிய நிலையிலே ஜனநாயக உரிமைகள் கூட்டமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: இந்த அமைப்பு தேர்தலுக்காக பயன்படுத் தப்படுமா?

தமிழர் தலைவர்: தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்த மில்லை. நாங்கள் அறிவிக்கும்போதே, தேர்தல் அரசியலுக்கு அப்பாற் பட்டது என்று அறிவித்திருக்கிறோம். Ôஜனநாயக உரிமைகள் கூட்டமைப்புÕ மூன்று பிரச்சினைகளை மய்யப்படுத்தியுள்ளது.

முதலாவது பறிபோகின்ற மாநிலங்களின் உரிமை களைத் தடுத்து நிறுத்த வேண்டும். உதாரணம் கல்வி. கல்வியை கன்கரண்ட் பட்டியலிலிருந்து யூனியன் பட்டியலுக்கே கொண்டு போகிறார்கள் நடைமுறையிலே. அந்த சூழ்நிலை உள்ளது.

இரண்டாவது மதசார்பின்மைக்கு ஏற்பட்டிருக்கிற  ஆபத்துகள். மிக முக்கியமானது. வெளிப்படையான ஆபத்துகள். மூன்றாவதாக சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகள். நீட் தேர்வு என்பது இருக்கிறதே,

21 ஆண்டுகளாக திராவிடர் கழகம், திமுக, போராடி, எம்ஜிஆர் கொண்டு வந்ததையே எதிர்த்து, பிறகு நுழைவுத் தேர்வை ரத்து செய்யவைத்து,  ஜெயலலிதா அம்மையார் தனி சட்டமே கொண்டு வந்தார்கள். அந்த சட்டம் கொண்டுவந்தபோது, ஒரு கருத்தை திராவிடர் கழகம் முன்வைத்தது. நுழைவுத் தேர்வு ரத்து என்கிற சட்டத்தை நேரடியாக போட்டால், நீதிமன்றங்களிலே சில நேரங்களில் சிக்கல் ஏற்படும். கல்வி நிபுணர் குழுவைப்போட்டு செய்யுங்கள் என்று சொன்னோம். அதை அந்த அம்மா கேட்கவில்லை. அவர்கள் அவசரஅவசரமாக செய்தார்கள். நீதி மன்றம் அறிக்கை கேட்டது. கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, அனந்த கிருஷ்ணன் தலைமையில் கல்வி நிபுணர்கள் குழுவை அமைத்தார்கள். அந்தக் குழுவின் அறிக்கையின் படியே நுழைவுத் தேர்வு கூடாது என்பதை தெளிவாக எடுத்துச்சொல்லி, அதன்படி சட்டமே நிறைவேற்றப்பட்டது.

ஆகவே, நுழைவுத் தேர்வை எதிர்த்துப்போராடிய வரலாறு தமிழகத்தின் 21 ஆண்டு வரலாறு. அதே போல, இரண்டு முறை திமுக, அதிமுக நுழைவுத் தேர்வுக்கு எதிராக சட்டம் இயற்றியதைப்போல் எந்த மாநிலத்திலும் கிடையாது.

மாநிலப்பட்டியலில் இருந்த கல்வியை, நெருக் கடிக் காலத்தில் 42ஆவது அரசமைப்புச்சட்டத் திருத்தத்தில் கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு போனார்கள். அன்றி லிருந்தே அதை எதிர்த்து வருகிறோம். அப்படி இருந்தாலும், பொதுப் பட்டியலில் இருக்கும்போது, மாநில அரசும் சட்டம் இயற்றலாம். மத்திய அரசும் இயற்றலாம்.

தமிழ்நாட்டின் வரலாறு வேறு விதமானது. உதாரணமாக இந்தியா முழுவதுமே ஒரே மாதிரியான கல்விக்கொள்கை இல்லை. எல்லா இடங்களுக்கும் ஒரே மாதிரி கல்வித்திட்டம் கிடையாது. இந்தியா வில் மாநிலத்துக்கு மாநிலம் கல்வித் திட்டம் வேறு பாடுகளுடன் இருக்கிறது.

சிபிஎஸ்இ என்று சொல்லக்கூடிய இந்தியை, சமஸ்கிருதத்தைத் திணிக்கக்கூடிய மத்திய கல்வித் திட்டத்தின்கீழ் உள்ள பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் பத்து விழுக்காடுதான். 90 விழுக்காடு பள்ளிகள் மாநில அரசின் பாடத்திட்டத்தின்படிதான் உள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படிதான் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

ரயில்வே தேர்வில் குளறுபடி

அதேபோல இன்னொரு கொடுமை என்னவென் றால், ரயில்வேத்துறையில் 5000 பேருக்கு டி குரூப் வேலைக்கு எடுப்பதற்கான அறிவிப்பு விளம்பரம் தமிழில் வந்தது. அதில் அட்டெஸ்டேஷன்  (சான் றொப்பம்) அளிக்க வேண்டிய தில்லை என்றும், ஆங்கிலத்தில் வெளியான விளம்பரத்தில் அட்டெஸ் டேஷன் வேண்டும் என்றும் விளம்பரம் வெளி யானது. அதனுடைய விளைவு என்னவென்றால், தமிழ்நாட்டிலிருந்து போன அத்துணை விண்ணப் பங்களும் நிராகரிக்கப்பட்டன.

அஞ்சல் துறைத் தேர்வில் மோசடி! நீதிமன்றத்தில்

வழக்கு தொடரப்படும்

அஞ்சல் துறைத் தேர்வில் பிற மாநிலத்துக்காரர்கள் தமிழ்த்தேர்வில்25மதிப்பெண்ணுக்கு24வாங்கி யிருக்கிறார்கள்.இதுஒருபெரும்மோசடிஎன்பது வெளிச்சத்துக்குவந்துள்ளது.இதுகுறித்து விடுதலையில்   எழுதியிருக்கிறோம். தமிழ்நாட்டுக் காரர்கள்எழுதுகின்றதேர்வில்மத்தியஅரசு நடத்துகின்ற போட்டித் தேர்வைக்கூட கட்டுப்படுத் துகிறார்கள். அங்கொன்று, இங்கொன்றாக கூறுவது, சில பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவது,  இது சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகி அந்தத் தேர்வு களே செல்லாது என்று அறிவிக்க திராவிடர் கழகம் வலியுறுத்தும்.

செய்தியாளர்: குறுகியகாலமாக தேர்வுக்கு ஒரு வாரம்தான் இருக்கிறதே?

தமிழர் தலைவர்: நீதிமன்றத்துககு செல்லும்போது, தேர்வு நடந்தால்கூட, தேர்வு முடிவை நிறுத்தி வைக்கச் சொல்வோம். வெளிப்படையாகவே உச்ச கட்டப் புரட்டுகள் நடக்கின்றன. வடநாட்டுக்காரனை எழுத சொன்னால், அவனுக்கு தமிழே தெரியவில்லை. அவன் தமிழில் 25-க்கு 24 மதிப்பெண்கள் பெற்றி ருக்கிறான். தமிழே தெரியாமல் இருக்கிறான் ஆதாரங் கள் இருக்கின்றன. அதனால், நீதிமன்றத்தில் தீர்வு கண்டாலொழிய,நம்முடைய இளைஞர்கள்ஏற் கெனவேவேலையில்லாதிண்டாட்டம்,பல லட்சக்கணக்கில் படித்த இளைஞர்கள் இருக்கிறார் கள். தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வில்லை.

இடைத்தேர்தலில் பணம்

அதையும் மீறி திமுக வெற்றி பெறும்

செய்தியாளர்: ஆர்.கே.நகரில் முழுவதும் பணம் வழங்கப் படுகின்றவே?

தமிழர் தலைவர்: நீங்கள் சொல்வதன்மூலமாக தெரிந்து கொள்கிறோம். உங்கள் தகவலை தேர்தல் கமிஷனுக்கு உங்கள்மூலமாக அளிக்கிறோம். தேர்தல் கமிஷன் என்று ஒன்று இருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. குதிரை போன உடனே லாயத்தை சாத்துவது என்று. அதிலே தேர்தல் கமிஷன் நிரம்ப எக்ஸ்பர்ட். எப்பவுமே குதிரை போனபிற்பாடுகூட அவர்கள் லாயத்தை சாத்துவது கிடையாது.

செய்¢தியாளர்: ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் குறித்து உங்கள் கருத்து....?

தமிழர் தலைவர்: மக்களுக்கு உள்ள உணர்வுகள், வருகின்ற செய்திகளைப்பார்த்தால், இதையும் தாண்டி திமுக வெற்றி பெறலாம். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ஏனென்றால், தொப்பியைப்பற்றி இரட்டை விளக்கு சொல்கிறது, இரட்டை விளக்கைப்பற்றி தொப்பி சொல்கிறது. தொப்பி, இரட்டை விளக்கு இரண்டையும் பற்றி படகு சொல்கிறது. இதையெல்லாம் கேட்ட மக்கள் தாராளமாக சரியான முடிவு செய்வார்கள்.

செய்தியாளர்: இந்தியாவில் அண்மையில் நடை பெற்ற தேர்தல்களையடுத்து பாஜகவின் அடுத்த குறி தமிழ்நாடு என்கிறார்கள், இதைத் தடுப்பதற்கு என்ன வழிகள்?

தமிழர் தலைவர்: ஆமாம். அதைத் தடுப்ப தற்குத்தான் இந்த ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு. ஒத்த கருத்து உள்ளவர்களை நாங்கள்  இணைக்கிறோம்.

கூட்டாட்சிக்கு எதிரான பாஜக

செய்தியாளர்: இதில் பாஜகவுக்கு எதிராக தேர்தல் கூட்டணி ஏற்படுத்தப்படுமா?

தமிழர் தலைவர்: மக்களை முதலில் தயார்படுத்த வேண்டும். முதலில் மதசார்பின்மை,  ஜனநாயகம். பின்னர்தான் மற்றவை.

பாஜக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் திட் டமே என்ன வென்றால், இந்திய யூனியன் என்பதில் கூட்டாட்சி முறை கூடாது என்பதுதான் அவர்கள் திட்டம். அதற்குப்பதிலாக ஒற்றையாட்சி முறைதான் இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் அவர்கள் இதையெல்லாம் செய்து வருகிறார்கள். மாநிலங்களின் அதிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக  பறித்துவிட்டு, அடுத்தபடியாக மாநிலங்களின் முனிசிபாலிட்டியையும் அவர்களுக்குக்கீழ் கொண்டு வந்துவிடுவது என்பதெல்லாம் கூட்டாட்சி தத்துவத்திற்கே விரோதமானது.

ஆகவே, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநிலங்களின் உரிமைகள் பறிப்புக்கு எதிராகவே முன்னுரிமை கொடுக்கும். மக்களை முதலில் தயார்படுத்த வேண்டும். தேர்தல் எல்லாம் பிறகுதான். கட்சிக்கண்ணோட்டம் இருக்கக் கூடாது. மக்கள் நலன், நாட்டு நலக் கண்ணோட்டம்தான் முன்னிறுத்தப்பட வேண்டும். ஓட்டுக் கண்ணோட்டம் இரண் டாவதாகத்தான் இருக்கும்.

செய்தியாளர்: விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்கிறார்களே?

தமிழர் தலைவர்: எனக்கு ஜோசியம் தெரி யாது. ஜோசியத்தில் நம்பிக்கையும் இல்லை. அண் மைக்காலமாக ஜோசியர் களுக்கே சிக்கல் இருக்கிறது. ஏழு கிரகங்கள்  புதிதாக கண்டு பிடித்துவிட்டதால், ஏற்கெனவே உள்ள கிரகங்களுடன் சேர்த்து, புது ஜாதகம்தான் அவர்கள் உண்டாக்க வேண்டும்.

செய்தியாளர்: தமிழ்நாட்டின்மீது மத்திய அரசு  நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றை மக்கள் எதிர்க்கின்றபோதே திணித்து வருகிறதே?

தமிழர் தலைவர்: அதைத்தான் நாம் கூறி வருகிறோம்.   ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட் டமைப்பில் இதுபோன்ற கருத்துகள் பரிசீலனையில் உள்ளன.

செய்தியாளர்: பயிர்க்காப்பீடு மிகக்குறைந்த அளவில் தமிழ்நாட்டில் உள்ளது. இதுகுறித்து...?

தமிழர் தலைவர்: காப்பீடு என்பதே இரண் டாவதுதான். உயிர் போனபிறகு என்ன செய்வது?  பயிருக்கு உயிர் போவதைவிட மனிதனுக்கே உயிர்போய்க¢¢கொண்டிருக்கிறதே! அதை முதலில் தடுத்திட வேண்டும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை எல்லாமே பாரபட்சம்தான். தலைக்கு ஒரு சீயக் காய், தாடிக்குஒருசீயக்காய்தான்.பாஜகவினர் தமிழ்நாட்டைக் குறிவைக்கிறார்கள். காவிரி ஆற்றில் உச்சநீதிமன்றம் சொல்லியும் செய்ய மாட்டேன் என்கிறார்களே. வெளிப் படையாக கருநாடகத்தின்பக்கம் ஏன் சாய்கிறார்கள்?

அடுத்து கருநாடகாவில் தேர்தல் வர வாய்ப் பிருக்கிறது, தமிழ்நாட்டில் என்ன செய்தாலும் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. என்னென்னவோ செய்து பார்த்தும், இங்கே மந்திரத்தால் மாங்காய் விழாது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இங்கே விமான நிலையத்தில் வரும் போது ஒன்று சொல் வார், விமானத்தில் ஏறும்போது ஒன்று சொல்வார். கழகங்களே இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்கிறார். அப்படி என்றால், என்ன பொருள்? கலகங்களே உள்ள தமிழகத்தை உருவாக்கப்போகிறோம் என்கிறார். கழகங்கள் இருப்பதால்தான் இங்கே இதுவரையிலும் மதக் கலவரங்கள், ஜாதிக்கலவரங்கள் இல்லாமல் இருக்கின்றன. ஆகவே, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளிலும் மக்களைத் தயாரிப்பதுதான் கூட்டமைப்பின் பணி.

செயல்படாத தமிழக அரசு

செய்தியாளர்: கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் கடன் நிரம்பவும் அதிகமான அளவுக்குப போய்விட்டது. இதுகுறித்து...?

தமிழர் தலைவர்: ஆமாம். நான்கு லட்சம் கோடி ரூபாய் கடன் என்பது கணக்கில் உள்ளது. அது இல்லாமல் இன்னும் கொஞ்சம் கோடிகள் இருக்கும். இதுவரையிலே இந்தியாவி லேயே கடன் அதிகமான பட்ஜெட் உள்ளது நம்முடைய தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டைத்தவிர வேறு இல்லை.

செய்தியாளர்: தமிழ்நாடு அரசின் தற்போதைய செயல் பாடுகள் பற்றி...?

தமிழர் தலைவர்: செயல்பாடுகளே இல்லை.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner