எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நெய்வேலி, ஏப்.1 பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நெய்வேலி நகரியம் தொ.மு.சங்க கருத்தரங்க அறையில் இன்று (1.4.2017) காலை 10 மணிக்குத் தொடங்கியது.

முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கும், அறிஞர் அண்ணா சிலைக்கும் மாலையினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும், பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களும் அணிவித்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர்.

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, அமைப்புச் செய லாளர் வெ.ஞானசேகரன், மண்டல திராவிடர் கழகத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், செயலாளர் சொ.தண்டபாணி,  கடலூர் மாவட்ட கழகத் தலைவர் தென்.சிவக்குமார், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் முத்து.கதிரவன், அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், செயலாளர் க.சிந்தனைச்செல்வன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் சு.பெ.தமிழமுதன், நெய்வேலி நகரிய கழகத் தலைவர் ச.சு.இசக்கிமுத்து, செயலாளர் கு.ரத்தினசபாபதி, அமைப்பாளர் தெ.இராதாகிருட்டிணன், நகரிய கழக இளைஞரணி தலைவர் இராசா சிதம்பரம், செயலாளர் மாணிக்கவேல், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

பயிற்சிப் பட்டறையை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் சி.சுகுமார் தலைவர்களுக்கு ஆடை போர்த்தி சிறப்பு செய்தார். துணைத் தலைவர் அய்யப்பன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, நிர்வாகி கதிரவன், சதீஷ், தமிழர் இயக்கப் பேரவை முகிலன், பொறியாளர் ராவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 100 மாணவர்கட்கும் மேல் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

‘பெரியார் ஓர் அறிமுகம்‘ எனும் தலைப்பில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வகுப்பு நடத்திட, முகாம் தொடங்கியது எழுச்சியோடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner