எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாசிக், ஏப்.2 பாஜகவுக்கு வாக்கு கள் விழும்படி வாக்குப் பதிவு இயந் திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தற்போது உண் மையாகி உள்ளது.

மத்திய பிரதேசத்திலிருக்கும் அடர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் ஒன்பதாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அந்தத் தொகுதிக்கு அனுப்பப்படவி ருக்கும் மின்னணுவாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை, அம்மாநில தேர்தல் அதிகாரி சலினா சிங் ஆய்வு நடத்தினார்.

அப்போது அதிகாரிகள் சுற்றி நிற்க  வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள நான்காம் எண்ணுள்ள பொத்தானை தேர்தல் அதிகாரி சலினா சிங் அழுத் தினார்.

பின்னர் இயந்திரத்திற்குள் இருக் கும் ரசீதை எடுத்துப் பார்த்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பாஜகவின் தாமரைச் சின்னத்தில் வாக்குப் பதிவாயிருந்தது. அது தொழில் நுட்ப தவறாக இருக்கலாம் என நினைத்து ஒன்றாம் எண்ணுள்ள பொத்தானை அவர் அழுத்தியதும் மீண்டும் தாமரைச்சின்னத்தில்தான் வாக்கு விழுந்திருந்தது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், ஒரு சில வாக்குப் பதிவு இயந்திரங்களில் இது போன்ற பிரச்சினைகள் இருந் தால் சரிசெய்துவிடுவோம். இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினைதான் என்று கூறிவிட்டனர்.

தேர்தல் அதிகாரி சலினா சிங் வாக்களிப்பது முதற்கொண்டு அனைத் தும் காணொலியில் பதிவாகி சமூக வலைதளங்களில் இந்த காட்சி பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், எலெக்ட்ரானிக் இயந் திரக் கோளாறு என்று சொல்கிறார்கள்.  அப்படியென்றால் பாஜகவுக்குச் சாதக மாக மட்டும் எப்படி இயந்திரக் கோளாறு உள்ளது என்று பதிவிட் டுள்ளார். மின்னணுவாக்கு இயந்திரங் களில் மோசடி செய்துதான் உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என மாயாவதி, கெஜ்ரிவால் உட்பட முக்கியமான கட்சி தலைவர் கள் சுட்டிக்காட்டினர். இச்சம்பவத்தின் மூலம் இது உண்மையாகியுள்ளது.

இம்மோசடியை முன்பே நிரூபித்த மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்

கடந்த மாதம் 23ஆம் தேதி மாலை மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டி ருந்தது. அப்போது எதிர்பாராத வகை யில் நாசிக் நகரின் மய்ய பகுதியான பஞ்சவத்தியில்  பதிவான வாக்குகள் 33, 289. ஆனால் 43,324 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.

அதனால் வாக்குச்சீட்டு பயன் படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.  இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட் டுள்ளது. எதிர்க்கட்சிகள் இணைந்து கண்டன கூட்டங்களை நடத்தின.

மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தின் மாதிரியை வைத்து இறுதி ஊர்வலம் நடத்தி போராட்டத் தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மும்பை சுயேட்சை வேட்பாளர் சிறீகாந்த் சிறீசத்தி சகிநாகாவில் அவரது "வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட அவருக்கு பதிவாகவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு நான் ஓட்டுப்போட்டேன். எனது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் ஓட்டுப்போட்டனர். எப்படி எனக்கு ஒரு ஓட்டுக் கூட பதிவாகாமல் போனது" என்றார். இது போன்ற புகார்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தது. இந்த விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக லோக்சகி பச்சாவ் ஆந்தோலன் என்ற அமைப்பு நாசிக்கில் அமைக்கப்பட் டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், "மோடியும், அமித்ஷாவும் இணைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்திருப்பதாக சந்தேகம் உள்ளது. அதற்கு ஏற்ப தற்போது பல முறை கேடுகள் வெளிவந்து கொண்டிருக் கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள் ளேன். வாக்களித்தது யாருக்கு என அறிவிக்கும் இயந்திரங்களை கொண்டு வர முடியவில்லை என்றால் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும்" என்றார்.

வாக்காளர் வாக்குப்பதிவு இயந்தி ரத்தில் வாக்களித்தவுடன், அதற்கான அத்தாட்சிப் பதிவு  வெளிவரும் வகையிலான இயந்திரம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடந்து வரு கிறது. இந்த முறை மூலம் தனது வாக்கு பதிவானதா? என்பதை வாக் காளர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த வகை இயந்திரம் 2019இல் அறி முகம் செய்யப்படும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டிருந்தது. ஆனால், இதற்கு மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்துக்கு எதிராக பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்  கிரித் சோமையா போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரத்தை மோசடி செய்து, முடக்க முடியும். அதில் முறைகேடு செய்வது எளிது என்று கூறியருந்தார்.

ஆனால், 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அவரது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். இயந்திர முறையில் எவ்வித தவறும் இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தற்போ துள்ள பழைய வாக்குப்பதிவு இயந்தி ரங்களை மாற்றிவிட்டு புதிய இயந் திரங்கள் அமைக்கும் பணி ஏற்கெ னவே நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய பாஜக அரசு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அனைத்து இயந்திரங்களையும் மாற்ற 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும். இந்த மேம்பாட்டு பணி ஒரு தொடர் பணி யாகும்" என்று கூறினார்.

2014ஆம் ஆண்டிற்கு முன் வாக் குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்று பாஜக குற்றம் சாட் டியது. ஆனால் அதன் பிறகு இந்த நடைமுறை மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 2010ஆம் ஆண்டில் வாக் குப்பதிவு இயந்திரத்துக்கு எதிரான இயக்கத்தை நடத்தினார்.

அய்தராபாத் நிறுவனத்தை சேர்ந்த கிரி பிரசாத் என்பவர் எப்படி, எந்தெந்த இடங்களில் இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று அப்போது விளக்கமளித்தார். அதன் பிறகு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருடியதாக கிரி பிரசாத் கைது செய் யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து தற் போது ஓய்வுபெற்றுள்ள காவல்துறை அதிகாரி சஞ்சிவ் கோக்லி கூறுகையில், "தற்போது பல குற்றச்சாட்டுக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இதே குற்றச்சாட்டுக்களை பா.ஜ.க. கூறியது. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்கான நேரம் மாறி மாறி வருகிறது. இது கோபத்தை ஏற்படுத்து கிறது" என்றார்.

மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் இது போன்ற பல்வேறு புகார்கள் வந்த போதும் மாநில பாஜக அரசு அந்தப் புகார்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner