எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஏப். 2 நாட்டில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்ததன் மூலம் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத் தும் விற்பனைக்குத் தயராகி விட்டது தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா, தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் உட்பட 43 நிறுவனங்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய வரு கின்றன என நாடாளுமன்றத் தில் அறிவிக்கப்பட்டது.

அதிகளவிலான போட்டி, மற்றும் திறமையற்ற நிர்வா கம், ஊழியர்கள் பற்றாக்குறை போன்ற  காரணமாக 43 மத்திய அரசு நிறுவனங்கள் நட் டத்தைச் சந்தித்து வருவதாக கூறி உள்ளது. 2015--2016ன் படி 2013--2016 நிதியாண்டுகளில் 43 பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக நட்டத்தை மட்டுமே சந்தித் துள்ளதாக பொதுத் துறை நிறுவனங்களின் மாநில அமைச்சரான பபுல் சுப்ரியோ நாடாளுமன்றத்திற்கு எழுத்துபூர்வமாக  அளித்த பதிலில்  தெரிவித்துள்ளார்.

விமான சேவை நிறுவன மான ஏர் இந்தியா, தொலைத் தொடர்பு சேவை நிறுவன மான பிஎஸ்என்எல் ஆகிய வற்றைத் தாண்டி, பிரிட்டிஷ் இந்தியா கார்பரேஷன், இந் துஸ்தான் ஆன்டி பயோடிக்ஸ், எச்எம்டி வாட்சஸ் லிமிடெட், இந்தியன் டிரக் மற்றும் பார்மா ஆகிய நிறுவனங்களும் இந்த 43 நிறுவனங்களில் அடக்கம் என்றும் கூறியுள்ளார்.

இதில் ஒருசில நிறுவனங் களான இந்துஸ்தான் பேப்பர் கார்பரேஷன் கீழ் இயங்கும் சாசர் காகித ஆலை மற்றும் நாகோன் காகித ஆலை ஆகிய வற்றை நவீனமயமாக்கம் செய்யவும் மத்திய அரசு தற் போது முடிவு செய்துள்ளதாக வும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், நஷ்டத்தில் இயங்கி வரும் மற்ற நிறுவ னங்கள் தொடர்ந்து செயல் படுமா அல்லது மூடப்பபடுமா என்பது குறித்து ஏதும் அறி விக்கவில்லை.

தொழிலாளர்கள் நிலை கேள்விக்குறி!

ஏற்கெனவே நட்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கவோ அல்லது மூடி விடும்படியோ நிதிஆயோக் மத்திய அரசை வலியுறுத்தி வருவது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த நிறுவ னங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner