எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஏப்.2 பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் மகனும், பீகார் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சருமாகிய தேஜ் பிரதாப் புதிய அமைப்பாக Ôமத சார்பற்ற சேவா சங்கம்Õ (தர்ம்நிர்பேக்ஷ் சேவக் சங்கம்) என்கிற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-. அமைப்புக்கு எதிரான அமைப்பாக உருவாக்கியுள்ளார்.

தேஜ் பிரதாப் 29 வயதில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவர். பீகார் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள வர். Ôதர்ம்நிரபேக்ஷ் சேவா சங்கம்Õ எனும் மதசார்பற்ற சேவை சங்கத்தைத் தொடங் கியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திட்டமிடப்பட்டு, விளம்பரப்படுத்தப் பட்டு, Ôமதசார்பற்ற சேவா சங்கம்Õ (தர்ம் நிர்பேக்ஷ் சேவக் சங்கம்) என்கிற பெய ரிலான புதிய அமைப்பில் இணைந்து பணியாற்ற இளைஞர் களுக்கு அழைப்பு விடுக்கின்ற சுவரொட்டிகள், விளம் பரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மேனாள் முதல்வர் ராப்ரிதேவி கூறும் போது, “பீகார் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்துத் துவா, மதவெறி செயல்பாடுகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில் புதிய அமைப்பு செயல்படும்’’ என்று  அண்மையில் குறிப்பிட்டார்.

பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் பொறுப்பு வகிக்கும் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "வகுப்பு வாதங்களின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளை வலிமையுடன் தடுத் திடும் வகையில் புதிய அமைப்பு செயல் படும். அனைத்து மத, வகுப்பினரையும் ஒன்றிணைக்கின்ற அமைப்பாக திகழும்Õ’ என்றார். தேஜ் பிரதாப் கூறுகையில், “இந்து யுவ வாகினி என்கிற அமைப்பை ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ளது. மக் களிடையே பிளவுகளை ஏற்படுத்து கின்ற ஆர்.எஸ்.எஸ்சின்  கொள்கை களுக்கு வலிமையாக எதிர்ப்பை வெளிப் படுத்துகின்றவகையில் அனைத்து வகுப்பினரும் நல்லிணக்கத்துடன் ஒன்று பட்டிருக்க வேண்டும் என்கிற எண்ணத் தில் தர்ம்நிர்பேக்ஷ் சேவக் சங்கம் இயங்கும்’’ என்றார்.

மதசார்பின்மைக்கான அடித்தளம்

“தர்ம்நிர்பேக்ஷ் சேவக் சங்கம் சார்பில் 2.4.2017 ஒற்றுமை பயணத்தைத் தொடங்குகிறோம். நாடு ஒற்று மையுடன் இருக்கவேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள் ஆகும்’’ என்றார்.

தேஜ்பிரதாப் நிறுவியுள்ள தர்ம் நிர்பேக்ஷ் சேவக் சங்கத்தின் சார்பில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களிலும் விளையாட்டுப் போட்டிகள், கராத்தே பயிற்சி, கோடைக்கால பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. டி.எஸ்.எஸ். சார் பில் மதசார்பின்மையை வலியுறுத்தி சமூக நீதிப்பயணங்கள் நடைபெறுகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner