எழுத்துரு அளவு Larger Font Smaller Font

*          இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 30ஆம் தேதி நடைபெறும்.

*          டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை எதிர்க் கட்சித் தலைவர்  மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார்.

*          விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொறியாளர் கிருபாகரன் இதயம் ஹெலிகாப்டரில் வேலூரிலிருந்து சென்னை வந்தது.

*          ஆர்.கே. நகர் தொகுதியில் ஓட்டுக்காக காமாட்சி விளக்கு, புடவை வினியோகித்ததாக 3 பேர் கைது.

*          சென்னையில் 115 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இட மாற்றம்.

*          திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்களில் போலி அய்.எஸ்.அய். தர முத்திரை தடுக்க இந்திய தர நிர்ணய அதிகாரிகள் அதிரடி ஆய்வு.

*          வங்காளதேசத்தில் அதிரடிப்படையினரால் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

*          பரகுவா நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை.

*          சீனாவில் உள்ள ஜின் ஜியாங்க் மாகாணத்தில் மத அடிப்படையில் நீண்ட தாடி வளர்க்கத் தடை.

*          தமிழகத்தில் மூடப்படாத மீதி மதுக்கடைகளையும் 11ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டுமென அரசுக்கு குமரி ஆனந்தன் வேண்டுகோள்.

*          உடலில் சேற்றை பூசிக் கொண்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று 5ஆவது நாளாக  முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

*          சிறுமியை காதல் திருமணம் செய்த வாலிபர்மீது பாலியல் வன்முறை வழக்கு பதியுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

*          பயணியை தாக்கிய பயணச்சீட்டு பரிசோதகருக்கு கண்டனம் தெரிவித்து மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் சக பயணிகள் போராட்டம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner