எழுத்துரு அளவு Larger Font Smaller Fontவிவசாயக் கடன்கள் ரத்து, தமிழகத்தின் நீர் ஆதாரங்களைப் பாதிக்கும் வகையில் அண்டை மாநிலங்களில் குறுக்கு அணைகள், தடுப்பு அணைகள் கட்டுதல் தடுப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் அளித்தல், விவசாயப்  பாதிப்பால் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்குதல்,  ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தித் தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு திராவிடர் கழகம் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. கழகத் தோழர்கள் ஒத்துழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.


சென்னை
3.4.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner