எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காந்திநகர், ஏப்.4 குஜராத் மாநிலத்தில் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து இரண்டு விதமான கருத்துகள் எடுத்த எடுப்பிலேயே தடுமாற்றத்தைக் கொடுப்பவையாக இருக்கின்றன என்று  டெக்கான் கிரானிக்கல் (2.4.2017) குறிப்பிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பாஜக அரசு கடந்த 31.3.2017 அன்று பசுவதைத் தடுப்புச் சட்டத்திருத்தம் தொடர்பாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அச்சட்டத்தின்படி,பசுவதைக்குஅதிக பட்ச தண்டனையாக ஆயுள் தண்ட னையும், குறைந்தபட்ச தண்டனையாக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளித்துள்ளது.

விலங்குகள்பாதுகாப்புசட்டத்திருத் தத்துக்கான வரைவில் குறிப் பிடும்போது,

“கடுமையானநடைமுறைகள்உரு வாக்கப்பட வேண்டியதாக இருக் கிறது.... சட்டவிரோத பசுக் கொலை களின் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டியுள்ளது...’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநில பாஜக அரசின் முதலமைச்சர் விஜய் ரூபானியின் நோக்கம் சரியாக இருந்தால், குஜராத் மாநிலத்தில் பசுவதை அதிகரிப்பு மற்றும் அச்சுறுத்தல்  குறித்த ஆதாரங்களை  புள்ளிவிவரங்களுடன் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகின்ற குஜராத்தில் பசுவதை அதிகரிப்பு மற்றும் அச்சுறுத்தல் என்று கூறப்படுவது முற்றிலும் உண் மையாக இருக்குமானால், அந்த உண்மைகளின் அடிப்படையிலேயே தீர்மானித்திடவேண்டும்.

இரண்டாவதாக, குஜராத் மாநிலத்தில் பசு மாடுகளைக் கொல்வதில் ஏற்கெனவே மோடி அரசின்  கருத்து வேறாகவே இருந்துள்ளது. ஆகவே, வரைவில் கூறப்படுவது அய்யத்துக்கிடமானதாக உள்ளது. ஆகவே,  தீர்மானிப்பதற்கு முன்பாக, பசுவதை அதிகரிப்பு, அச் சுறுத்தல் குறித்த புள்ளிவிவரங்கள் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இரண்டுவிதமான புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட வேண்டும். மாநிலத்தில் இயற்கைக்கு மாறாக பசுக்கள் எண் ணிக்கையில் குறைந்து, பசுக்களின் இனமே அழிந்துபோவது அல்லது கொல்லப்பட்ட பசுக்களின் எண்ணிக் கையை உறுதிப்படுத்தக்கூடிய புள்ளி விவரங்கள் மற்றும் குற்றங்கள்மீதான பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படவேண்டும்.

மாநிலத்தின் சட்டமன்றத்தில் குஜ ராத் மாநில விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட் டதற்கான காரணங்களாக  சட்ட வரை வில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அம்சங்கள் தடுமாறச் செய்பவையாக உள்ளன.

மோடியின் குஜராத் காலகட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில், சட்டமன்ற பார்வையாளர் மாடத்தில் காவிமயமாக்கும் இந்து சாமியார்களே நிரம்பி இருந்தார்கள்.

பசுமாடுகள்கொல்லப்படுவதுஅதி கரிப்பு மற்றும் பசு மாடுகள் இனமே அழிந்து போகும் என்கிற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகசட்டவரைவில் குறிப் பிட்டப்பட்டுள்ள அந்த இரு கருத்துகளும் ஆழமான அரசியல் தூண்டுதலுடன் இருக்கின்றன. அதன்படியே, திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாடுகள்கொல்லப்படுவதைக்கூறு கின்ற அதேநேரத்தில் மனிதப் படு கொலைகள் மறைக்கப்படுகின்றன. பசு மாடுகள் கொல்லப்படுவதற்கு அதிக பட்ச தண்டனை என்று கூறுகின்ற நேரத்தில், விவசாயிகளுக்கே அதிகபட்ச தண்டனைகள் அளிக்கப்படுகின்றன என்கிற உண்மைகள் வெளியே அரி தாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.

தேர்தலை எதிர்நோக்கி

காவிமய அதிகாரிகள் நியமனங்களா?

குஜராத் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்  வெகு தொலைவில் இல்லை என்பதால், அரசுத்துறை அலுவலர்களாக, வெளிப்படையாக அல்லது மறைமுக மாக காவி மயப்படுத்தப்பட்ட, மத வாதங்களைக் கொண்டுள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

பசுமாட்டைக் கொன்றால், தண்ட னையை அதிகரிக்கின்ற வகையில், ஆயுள் தண்டனை என்று காவிக்கட்சியான பாஜக சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. (இதேபோன்றதொரு கடுமையான சட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலமும் பின்பற்றி சட்டம் இயற்றுமா? என்பதை யார் அறிவார்?) ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளைவடகிழக்குமாநிலங் களில் அக்கட்சி எடுக்க முன்வராது.  வடகிழக்குமாநிலங்களில்மாட்டி றைச்சி உண்பது என்பது எல்லோரிடமும் உள்ள பழக்கமாகும். அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்தவரானகிரெண்ரிஜ்ஜூமாநிலத் திலிருந்து மத்தியில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மாட்டிறைச்சியை சாப்பிட்டுள்ளார் என்று அண்மையில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சந்தர்ப் பவாதம், நாள்தோறும் கேலிக்கூத்துகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner