எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஏப்.5- வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் பாஜவை வெல்ல வேண்டுமென்றால் மெகா கூட்டணி அமைப்பது அவசியம் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்த லில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதைதொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா உள் ளிட்ட மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜ தொடர் வெற்றியை பெற்றது. உத்தரபிரதேசம், உத்தர காண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தது.

கோவா, மணிப்பூரில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு டன் பாஜ ஆட்சி அமைத்தது. இதேபோன்று, 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை தக்க வைக்க பாஜ இப்போதிருந்தே தயாராகி வருகிறது. இது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,வருகிற நாடா ளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்கொள்ளவேண்டும் என்றால் மெகா கூட்டணி அமைப்பது அவசியம் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறு கையில்,

2015 ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்ததன் மூலம், பாஜவை தோற்கடிக்க முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள வேண் டுமென்றால், தேசிய அளவில் பாஜ அல்லாத கட்சிகள் ஒன் றிணைந்து மெகா கூட்டணி அமைப்பது அவசியம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner