எழுத்துரு அளவு Larger Font Smaller Font


உ.பி. அரசின் மண்டையில் அடித்தது

அலகாபாத் உயர்நீதிமன்றம்லக்னோ, ஏப்.6 உணவுப் பழக்கம் தனி மனிதனைச் சார்ந்தது - இறைச்சிக் கூடங் களை மூடுவது சட்ட விரோதம் என்று உ.பி. அரசின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளது உயர்நீதிமன்றம்.

அலகாபாத்உயர்நீதிமன்றம்அரசு இறைச்சிக்கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளின் உரிமங்களைப் புதுப்பிப்பது குறித்து குழுவை அமைத்து குழுவின் அறிக்கையை அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசமாநிலத்தில்பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 10 நாள்களில் இறைச்சிக்கூடங்கள் மற்றும் இறைச் சிக்கடைகளைஉரிமங்களின்றிசட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாகக் கூறி அனைத்து இறைச்சி வணிக நிறு வனங்களையும் முற்றிலும் மூடும்படி சாமியார் ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டு இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச் சிக்கடைகளை மூடியது.

இறைச்சி வணிகர்கள் 27.3.2017 முதல் 2.4.2017 முடிய ஒரு வார கால வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள்.

இறைச்சிக்கடை உரிமையாளர்களி டம் உரிமங்களைப் புதுப்பிப்பதில் எவ்விதஆலோசனைகளையும் செய் யாமல் இறைச்சிக் கடைகளை உத்தரப் பிரதேச அரசு மூடுவது என்பது கவ லைக்குரியது என்றும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக் னோ கிளையில் இறைச்சிக்கடைகளை உத்தரப்பிரதேச அரசு மூடுவதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேரி லக்கிம்பூர் நகர்பாலிகா பகுதியில் உள்ள இறைச்சி விற்பனைக்கான கடை உரிமையாளர் தம்முடைய இறைச்சிக் கடையின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்த நிலை யில் உரிமம் புதுப்பிக்கப்படாமல், கடையை மூடும்படி அரசு உத்தரவிட் டதை எதிர்த்தும், உரிமத்தைப் புதுப் பிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி யும் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாகி, நீதிபதி சஞ்சய் ஹர்கவ்லி இறைச்சி வணிகர்களின் கடை உரிமங்களைப் புதுப்பிப்பது தொடர்பாக வணிகர்களிடம் கலந்தாய்வு ஏதும் செய்யாமல் கடைகளை மூட உத்தரவிடுவது கவலை அளிக்கிறது என்று வழக்கு விசாரணையின்போது குறிப்பிட்டுள்ளார்கள்.

கடந்த கால அரசு உரிமங்களைப் புதுப்பிப்பதில் செயல்படாத நிலை இருந்தது என்கிற காரணத்தாலேயே, உரிமங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்கிற காரணத்தைக்காட்டி இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடிவிடக்கூடாது.

அரசமைப்பு,சட்டப்படிவழங்கி யுள்ள உரிமைகளின்படி, அரசமைப்பின் 21 ஆவது பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகளை வழங்கி வாழ்வாதார உரிமைகளை அளித்துள்ளது என்று குறிப்பிட்டது.

வழக்கு விசாரணையின்போது நீதி மன்றம் குறிப்பிடும்போது, “உணவு என்பது உடல் நலத்துக்கானதே தவிர குறிப்பிட்ட உணவை உண்பதை  தவறு என்று கூறக்கூடாது. அதேபோல்,

உடல் நலத்துக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு சத்தான உணவு  எப்போதும் கிடைப்பதை அரசு உறுதி செய்யவும் வேண்டும்.

இறைச்சிக்கடைகளுக்கான  உரிமங்களைப் புதுப்பிப்பதில் வணிகர்களிடம் உரிய கலந்தாய்வுகள் ஏதுமில்லாமல் மூடும்படி உத்தரவு பிறப்பித்ததைக் கண்டித்துள்ள நீதிமன்றம், இப்பிரச்சினையில் தீர்வை   எட்டும்வண்ணம் உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழுவை 10.4.2017 ஆம் தேதிக்குள் அரசு அமைக்க வேண்டும் என்றும், 13.4.2017 ஆம் தேதிக்குள் குழுவின் இறுதி அறிக்கையை  நீதிமன்றத்தில் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓராண்டுக்கு முன்பாக மும்பை உயர்நீதிமன்றம் இதேபோன்றதோர் எச்சரிக்கையை வெளியிட்டது. அதில் கூறும்போது, உணவைத் தேர்ந்தெடுத்து உண்பது என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனைப் பொருத்ததேயாகும். குடிமகனின் உடல்நலனுக்குக் கேட்டை ஏற்படுத்தாத எந்த உணவையும் தேர்ந்தெடுக்கின்ற உரிமை குடிமகனுக்கு உண்டு. ஆகவே, குடிமகன் தனக்குத் தேவையான உணவைத் தேர்ந்தெடுப்பது, வைத்திருப்பது மற்றும் உண்பது என்பதை அரசு தடுக்கக்கூடாது. குடிமகனின் உணவுரிமையில் அரசு தலையிடக்கூடாது என்று குறிப்பிட்டது.

அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் குறிப்பிடும்போது,

சட்டவிரோத செயல்களை ஆய்வு செய்யும் அதேநேரத்தில் சட்டப்படியான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக உணவு, உணவுப்பழக்கங்கள் வாழும் உரிமைகளுடன் தொடர்பு உள்ளவையாகும். மாட்டிறைச்சிக்கு முழுமையாக தடைபோடுவது என்பது நுகர்வோர் மற்றும் வணிகர்களை பெரிதும் பாதிப்பதாகும்.

இதுபோன்ற தொழில்கள், வணிகங்கள் செய்து  வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக அரசமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகள் பிரிவு 19 மற்றும் பிரிவு 21இன்படி உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளாகும். அந்த உரிமை முற்றிலும் தடைசெய்யப்படும்போது, அத்தொழில்சார்ந்துள்ளவர்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.

இவ்வழக்கில் உத்தரப்பிரதேச மாநில அரசுத்தரப்பில் கூறும்போது, “இறைச்சி உண்பதை உத்தரப்பிரதேச அரசுக்குத் தடை செய்யும் நோக்கம் இல்லை. அனைத்து இறைச்சிக் கூடங்களையும், இறைச்சிக்கடைகளையும் மூடும் நோக்கம் இல்லை. உச்சநீதிமன்றத்தில் லட்சுமி நாராயண மோடி மத்திய அரசுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவு கடைப்பிடிக்கப்படுவதாகவும் மற்றும் பசுமைத்தீர்ப்பாய வழிகாட்டுதல்களின்மூலமே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க அரசு விரும்பியது’’ என்று உத்தரப்பிரதேச அரசு நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner