எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேள்வி: ‘பெண்ணை வைத்துச் சூதாடும் புத்தகத்தைப் படிக்கும் ஊர்’ - என்று மகாபாரதத்தை இழிவுபடுத்தி, நடிகர் கமலகாசன் பேசியுள்ளதுபற்றி...?

பதில்: இந்த நாட்டில் இந்துக்களை மட்டும் இழிவுபடுத்திப் பேசும் பேச்சுரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அந்த உரிமை கமலகாசனுக்கு மட்டும் கிடையாதா? ‘விஸ்வரூபம்‘ அனுபவத்துக்குப் பிறகு, யாரைப்பற்றி என்ன பேசலாம், யாரைப் பற்றி என்ன பேசக் கூடாது என்று அவருக்குத் தெரியாதா?

(‘துக்ளக்‘, 12.4.2017, பக்கம் 21)

கமலகாசன் கூற்றுக்குப் பதில் இருந்தால் அதனைக் கூறட்டும் - வரவேற்கலாம். உடனே வழக்கம்போல ஒப்பாரி வைப்பதா - அனுதாபத்தைத் தேடுவதா?

இந்துக்களைப்பற்றி மட்டும்தான் பேசுவார்கள்; மற்ற மதங்கள்பற்றி எல்லாம் பேசமாட்டார்கள் என்ற ஒப்பாரி கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ஒன்று.

வைத்தியரே, வைத்தியரே முதலில் உங்கள் நோயைப் போக்கிக் கொள்ளுங்கள் - ஊருக்கு உபதேசம் அப்புறம் இருக்கட்டும்!

சந்து என்ற ஒன்று இருக்கும்வரை விபச்சாரத்தைத் தடுக்க முடியாது என்று சொல்லும் மகாபாரதத்தைக் காப்பாற்ற யார் முயன்றாலும், அவர்களும் சந்தேகத்துக்கு உரியவர்களே!

கேள்வி: 2000 கன அடி தண்ணீர் திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம் கூறியும், ‘காவிரியில் எங்கள் பயன்பாட்டிற்கே தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் விட முடியும்‘ என்று கருநாடக முதல்வர் சித்தராமையா கூறுகிறாரே?

பதில்: நியாயம் சொல்வது உச்சநீதிமன்றத்துக்கு எவ்வளவு முக்கியமோ, அதற்குமேல், அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கும் சித்தராமையாவுக்கு ஓட்டு முக்கியம்.

(‘துக்ளக்‘, 12.4.2017, பக்கம் 21)

அடுத்த ஆண்டு தேர்தல் என்பது காங்கிரசைச் சேர்ந்த சித்தராமையாவுக்கு மட்டும்தான் முக்கியமா?

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியும், அவ்வாறு கூற உச்சநீதிமன்றத்திற்கே அதிகாரம் இல்லை என்று மத்திய பி.ஜே.பி. அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்னதற்கு என்ன காரணமாம்? அடுத்த ஆண்டு கருநாடக மாநிலத்தில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. வெற்றி பெறவேண்டும் என்ற உள்நோக்கம்தானே!

தான்தான் உலகப் புத்திசாலி என்று குருமூர்த்திகள் ரொம்பவே  துள்ள வேண்டாம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner