எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

எனக்கு வாக்குகளை அளியுங்கள்,

நல்ல தரமான மாட்டிறைச்சியை அளிப்பேன்!

கேரளாவில் பாஜக வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி

மலப்புரம், ஏப்.6 மலப்புரம் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத் தப்பட்டுள்ளவர் என்.சிறீபிரகாஷ். மலப்புர தொகுதியில் நல்ல தரமான மாட்டிறைச்சியை வழங்கவும், சுத்தமான இறைச்சிக்கூடங்களை தொகுதியில் அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி அளித்து வருகிறார்.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை என்று சட்டம் இயற்றியுள்ள நிலை யில்,அதேகட்சியைச் சேர்ந்த வேட் பாளர் கேரளாவில் கட்சியின் கருத்தோட் டத்துக்கு எதிராக வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.

இந்தியாவில் பசு மாட்டிறைச்சிக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத சில இடங்களில் கேரளாவும் ஒன்று.

பசு மாட்டைக் கொல்வது, பசு மாட்டிறைச்சியை விற்பனை செய்வது மற்றும் உண்பது என அனைத்து வகை யிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் தடைகள் போடப்படுகின்றன. அதே கட்சியின் வேட்பாளரோ, தன்னை மக்கள் தேர்ந்தெடுத்தால், நல்ல மாட்டி றைச்சியை வழங்குவேன் என்று அவர் அளித்த  வாக்குறுதி கேரள மாநிலத்தில் ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் மலப்புரம் தொகுதியில் எதிர்வரும் இடைத்தேர்த லில் பாஜகவின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவரான என்.சிறீபிர காஷ் கூறும்போது,

“என்னைத் தேர்ந்தெடுத்தால், தொகுதியில் நல்ல தரமான மாட்டி றைச்சியை வழங்கவும், சுகாதாரமான இறைச்சிக் கூடங்களையும் அமைத் திடவும்  என்னால் ஆன எல்லா வகையி லான முயற்சிகளையும் செய்வேன்’’ என்றார்.

மேலும், கடந்த காலங்களில் காங் கிரசு ஆட்சிக்காலத்தில் கேரளாவில் பசுவதைக்குத் தடை போட்டது என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசு வதைத் தடையில்  சாமியார் ஆதித்யநாத் அரசு தீவிரம் காட்டி வருகிறது.  ஏப்ரல் ஒன்றாம் நாளன்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் பசு வதையில் ஈடுபடுவோரை தூக்கில் போடுவோம் என்றார்.

நாகாலாந்து மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த பொறுப்பாளர் கூறும்போது,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உத்தரப் பிரதேசத்தைப்போல் நாகலாந்தில் வடகிழக்கு மாநிலங்களில் பசுவதை தடையைக் நடைமுறைப்படுத்த மாட் டோம் என்கிறார்.

மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் மற்றும் பாஜக ஆளும் அருணாசலப்பிரதேச மாநிலங்களில் பசுவதைக்கு தடை கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner