எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை ஆர்.கே.நகரில் ‘பிளாஸ்டிக் சவம்‘ வைத்து  அரங்கேறும் அரசியல் அநாகரிகம்!

சவப்பெட்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க -

அந்தக் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், ஒரு சவப்பெட்டி அதில், மறைந்த ஜெயலலிதாவின் ‘பிளாஸ்டிக் சவம்‘ தேர்தல் மேடையில் வைத்து வாக்குச் சேகரிப்பதைவிட அருவருக்கத்தக்க அரசியல் அநாகரிகம் - மறைந்த தலைவருக்குச் செய் யும் அவமரியாதை பொங்கும் அவமானம் வேறு இருக்க முடியுமா?   சவப்பெட்டி அரசிய லுக்கு முற்றுப்புள்ளி வைக்க - அந்தக் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதே நியாயப்பூர்வமானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இவ்வளவு கேவலமான

ஓட்டுப் பொறுக்கும் மேதைகளை(?)

இதுவரை யாம் கண்டதில்லை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  எவ்வளவு தரம் தாழ்ந்த பிரச்சாரம், வாக்குகளை வாங்கிட பல தரப்பும் பணப் பட்டுவாடா, ‘அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாள்’ என்ற பழமொழிக்கொப்ப அதிகாரிகளுக்குமேல் அதிகாரிகள் அடுக்கு - எல்லாம் இருந்தும், இவ்வளவு கேவலமான ஓட்டுப் பொறுக்கும் மேதைகளை(?) இதுவரை யாம் கண்டதில்லை.

அவமானம்

வேறு இருக்க முடியுமா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறைந்து, ஈரம் காயாத போதே நடுநிசியில் பதவியும் ஏற்று, சவ அடக்கத்தில் ‘மவுன சாமியார்களாக’ இருந்துவிட்டு, தங்களுக்குப் பதவி போனது என்று சொன்னவுடன், இன்று ‘‘அம்மா மரணத்தில் உள்ள ‘மர்மம்‘ பற்றிய விசாரணை தேவை’’ என்று வீராவேச கர்ச்சனை செய்வது கடைந்தெடுத்த கயமைத்தனம் என்பதோடு, முதலமைச்சராக அப்போது பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வத்தை ‘ஒரு பிஹ்ஜீஷீநீக்ஷீவீtமீ - போலி நடிப்புச் செய்பவர், பாசாங்கு காட்டுபவர்’ என்று ‘அர்ச்சனை’ கூறி சசிகலா அணியில் இருப்பவர் ஒருவரால் வர்ணிக்கப்பட்டவர்; இன்று, இடைத்தேர்தலில் ஒரு சவப்பெட்டி; அதில், ஜெயலலிதாவின் ‘பிளாஸ்டிக் சவம்‘ தேர்தல் மேடையில் வைத்து வாக்குச் சேகரிப்பதைவிட அருவருக்கத்தக்க, அரசியல் அநாகரிகம் - மறைந்த தலைவருக்குச் செய்யும் அவமரியாதைப் பொங்கும் அவமானம் வேறு இருக்க முடியுமா?

ஓ.பன்னீர்செல்வம் அணி தேர்தலில் போட்டியிட்டு வாக்குச் சேகரிக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ள னவே!

இதில் திராவிட முன்னேற்றக் கழகம்தான் தனது பணி - பிரச்சாரத்தை கண்ணியம் தவறாது செய்து வருகிறது!

ஜனநாயகம் என்று அழைப்பதற்கே

நா கூசுகிறது!

நம் நாட்டு ஜனநாயகம் என்னும் பண நாயகத்தில், தலைநகர் சென்னையில் அதுவும் முன்னாள் முதல்வர் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்ட ஒரு தொகுதியில் இப்படியா அரசியல் அலங்கோலம், பணநாதன் திரு விளையாடல் விளையாடுவது?

‘‘மிஸ்டு கால்’’ கட்சியோ அப்பட்டமாக ஜாதி அடை யாளச் சீட்டை இதுவரை ஒட்டிக்காட்டாத ஒருவர் நெற்றி யில் ஒட்டியாவது, கட்டிய பணத்தைத் திருப்பி வாங்க முடியாதா என்று முயற்சிக்கிறது. வேடிக்கை - விசித்திரம்!

என்னே வெட்கக்கேடு!

இதை ஜனநாயகம் என்று அழைப்பதற்கே நா கூசுகிறது! இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தேர்தலில் நிற்க

தகுதிக் குறைவுடையவர்

இந்த சவப்பெட்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அந்த கட்சி வேட்பாளர் தேர்தலுக்கு நிற்க தகுதிக் குறைவுடையவர் (ஞிவீsஹீuணீறீவீயீஹ்) என்று செய்வதே நியாயபூர்வமானதொரு நடவடிக்கையாக இருக்கும்.

மருத்துவமனையில் மட்டுமே - மார்ச்சுவரி - பிண அறையில் மருத்துவ மாணவர்களுக்கு வகுப்பெடுக்க சடலங்களைப் பயன்படுத்துவது என்பது வழமையான ஒன்று  என்பதை நாடறியும்! இங்கோ வாக்குச் சேகரிக்க இந்த வக்கிரம வேலை!

புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுத் தொலையட்டும் - பொறுத்துக் கொள்ளலாம் - இப்படி இறந்துபோனவரின் சடலம் போல் - பிளாஸ்ட்டிக் சடலத்தைக் காட்டி ஓட்டு கேட்பது என்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது - இதற்கொரு முற்றுப்புள்ளி தேவை!

இன்றேல், அடுத்தத் தேர்தலில் நிஜப் பிணங் களுக்குக்கூட ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டு, சுடுகாட்டு அரசியல் அரங்கேறிவிடும் அபாயம் சர்வ சாதாரணமாகி விடும் - எச்சரிக்கை!

 

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.


சென்னை
7.4.2017

Comments  

 
#1 m.manokaran 2017-04-08 13:08
அய்யா சொல்வது போல சவ பேட்டி வைத்து ஒட்டு கேட்கும் இந்த கூட்டம் உண்மையான பிணத்தை வைத்து ஒட்டு கேட்கும் காலம் வரக்கூடாது என்பதை நம் மக்கள் உணரவேண்டும் மேலும் தேர்தல் ஆணையமும் பி ஜெ பியும் இந்தமாதிரி ஒட்டு சேகரிக்கும் ஓ பீ எஸ் யை எப்படி தடுக்காமல் இருக்கிறார்கள் இது ஜனநாயக தேர்தலா ??இந்த தேர்தலை முடக்குவதே சிறந்தது மேலும் இந்த இரு கூட்டணிகளை மக்கள் புறக்கணிக்கவேண் டும் அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner