எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 7- ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் ஜூலை 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாள்களும் பன்னாட்டு அளவில் பெரியார் சுயமரியாதை இயக்க மாநாட்டினை நடத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான பங்கேற்பு பற்றிய பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில், சிகாகோ நகரில் தலைமையிடத் தினைக் கொண்டு செயல்பட்டு வரும் பெரியார் பன்னாட்டு மய்யம் முன்னெடுத்து, ஜெர்மன் நாட்டு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் கிளையும், தஞ்சாவூர் - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திடவுள்ள பன்னாட்டு மாநாடு முன் னேற்பாடுகள் பற்றிய காணொலி கலந்துரையாடல் (tele - conferencing) சென்னை - பெரியார்திடலில் 6.4.2017 அன்று முற்பகல் 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

காணொலி கலந்துரையாடல் கூட்டத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி நாட்டுக் கிளையின் தலைவரும், கொலோன் பல்கலைக்கழகப் பேராசிரியருமான முனைவர் உல்ரிக்நிக்லஸ் கலந்து கொண்டார். கலந்துரையாடலில் அமெரிக்க நாட்டில் இருந்தவாறே பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலை மையிடத்து இயக்குநர்கள் டாக்டர் சோம.இளங்கோவன், பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் ஆகியோரும் பங்கேற்றனர்.

பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்கவுள்ள பன்னாட்டு மனிதநேய தலைவர்கள் மற்றும் பேராளர்களுடனான தொடர்பு, மூன்று நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள், மாநாட் டில் படித்து, கலந்துரையாடப்படவுள்ள ஆய்வுக் கட்டுரை களின் தலைப்புகள் ஆகியன பற்றி மிகவும் விரிவாக கலந்துரையாடல் நடைபெற்றது. ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கலந்துரையாடலின்பொழுது திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆகியோர் உடன் இருந்தனர். மாநாட்டு ஏற்பாடுகள் மற்றும் அவை குறித்த அடுத்த காணொலி கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் 20ஆம் நாள் முற்பகல் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

பகுத்தறிவுவளர்ச்சிமற்றும்பயன்பாடு,அனை வருக்கும்கல்விமற்றும்அதன்மேம்பாடு,அறிவியல் மனப்பான்மையினை வளர்த்தலை செயல் திட்டங் களாகக்கொண்டுசமூகப்பணிஆற்றிவரும்பெரியார் இயக்கம்,அறிவியல்மற்றும்தொழில்நுட்பவளர்ச்சி யினைபயன்படுத்தும்விதமாகஉலகின்பல்வேறு பகுதிகளில் உள்ள மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் - சென்னை - பெரியார் திடலிலிருந்து தமிழர் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் உல்ரிக்நிக்லஸ் (இந்திய நேரப் படி பகல் 11.30 மணி) மற்றும் அமெரிக்க நாட்டு பென்சில்வேனியா மாநிலம் - ஹாலந்து நகரிலிருந்து டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்க நாட்டு நேரப்படி இரவு 3 மணி), டெக்சாஸ் மாநிலம் - பிளானோ நகரிலிருந்து முனைவர் இலக்குவன் தமிழ் (இரவு 1.30 மணி) என்ற அளவில் இருந்து பங்கேற்ற காணொலி கலந்துரையாடல், பெரியார் இயக்க செயல்பாட்டிலும் கணினி வழிப் பயன்பாடு முழுமையாக உள்ளதை வெளிப்படுத்தும் நிகழ்வாக சிறப்புக்குரியதாக இருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner