எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப். 8 ராஜூ முருகன் இயக் கத்தில் உருவாகி, வெளி வந்த ஜோக்கர் திரைப் படம், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக் களைப் பெற்றது.

ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும், அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஆதிக்க அரசியலையும் அம்பலப் படுத்தி இருக்கும் ஜோக்கர் திரைப்படத்திற்கு இந்த ஆண் டிற்கான சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது,

இப்படத்தில்  ஒரு பாடல், போராட்டத்தின் வடிவங்களின் தொகுப்பாக இருக்கிறது. ஒரு பாடல், கழிவறை கட்டுவதற்கு நடத்தப்படும் அவலத்தின் சோகத்தை பிரதிபலிக்கிறது. ஒரு பாடல், நீதியின் போராட்டத்தை விசாலமாக்குகிறது. ஒரு பாடல், எளிய காதலை சொல்லுகிறது.

அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக உயிரையும் தியாகம் செய்கிறான் ஜோக்கர். மது, ஜாதி, மதவாதம், ஊழல் என்று அடித்தட்டு மக்கள் சந்திக்கும் எல்லா கொடுமை களையும் கழிவறையின் அரசியலிருந்து அழகாக சொல்லி இருக்கிறார் ராஜு முருகன். யாருக்காக நாம் போராடுகிறோமோ அவர்களே நம்மை புரிந்து கொள்ளவில்லை என்கிற வசனம் உண்மையானது. வலி மிகுந்தது. வீதியில் நின்றுகொண்டு அநீதிக்கு எதிராக போராடும் எல்லா போராளிகளையும் கவுரவப்படுத்தி இருக்கிறார் ராஜு முருகன்.

அம்பேத்கர், பெரியார், ரோஹித்வெமுலா, செங்கொடி, போராட்டம், பறை இசை என்று நீதிக்கான எல்லா அடையா ளங்களும் ஜோக்கரை வலிமையாக்கியுள்ளன.

தமிழர் தலைவர்  இப்படத்தை பார்த்து இயக்குநரை பாராட்டினார்.  இந்த ஆண்டு நடந்த தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் நடத்திய திராவிடர் திருநாள் விழாவில் ஜோக்கர் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகனுக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner