எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஏப். 8 நாடு முழுவதும் பசுவின் பெயரால் குறிப்பிட்ட மதத்தவர் வன் முறைக் கும்பலால் அடித்து கொலை செய்யப்படுவது தொடர்பாக பசுப் பாதுகாவலர் என்ற அமைப்பை ஏன் தடை செய்யக்கூடாது என்று பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை கேள்வி ஒன்றை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வர் நகரில் பால்பண்ணை நடத்திவரும் இஸ்லாமியர்  பசு பாதுகாவலர்கள் சங்கத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பசு கடத்தலுக்குத் தடை விதித் தார். இதையடுத்து, மாட்டி றைச்சி தொடர்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்  பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தானில் பசு மாடுகளை ஏற்றிவந்த ஹெய்லிகான் என்ப வரை பசு காவலர்கள் கடுமை யாகத் தாக்கினார்கள். மேலும் இதில் பெஹ்லுகான் என்பவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பசுக்களைப் பாதுகாப் போர் சங்கங்களை சட்ட விரோதமானவை என அறிவிக் கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பசுக் களைப் பாதுகாக்கும் சங்கத்தினர், வன் முறையில் ஈடுபடுவதால், அவற்றை சட்ட விரோதமானவை என்று அறி விக்க மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்க,  ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜ ராத் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. மேலும், ஹெய்லிகான் வழக்கு தொடர்பாக  மூன்று வாரத்துக்குள் பதில ளிக்க வேண்டும் என்று ராஜஸ் தான் மாநிலத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் மே 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner