எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஏப்.8 தங்களைத் தாங்களே பசுப்பாதுகாவலர்கள் என்று அறிவித்துக் கொண்டு சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்துத்துவா வன்முறையா ளர்களால் சமுதாயத்தில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அல்வார் பகுதியில் நடைபெற்ற வன் முறைச் செயல்களால், அரியானாவில் பால்பண்ணை நடத்தி வரும் பெஹ்லுகான் எனும் பால்பண்ணை விவசாயி கடுமை யாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து ராஜஸ்தான் மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்து அறிவிக்கையை அனுப்பியுள் ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து எடுத்துள்ள நடவடிக்கைக் குறித்தும் அறிக்கை அளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

1.4.2017 அன்று பெஹ்ரோர பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 8இல் பசுப்பாதுகாவல் குழுக்கள் என்கிற பெயரில் கூடியவர்கள் பசுக்களைக் கடத்துவதாகக்  கூறி பலரையும் சரமாரியாகத் தாக்கினர். ஆனால், தாக்கப் பட்டவர்கள் உண்மையில் பால் விற்பனை செய்யும் விவசாயிகள் ஆவார்கள். பசு மாடு களை விலைகொடுத்து வாங்கியதற்கான ரசீதை ஜெய்ப்பூர் நகராட்சியிடமிருந்து முறையாக பெற்றவர்

பசுப் பாதுகாவல் குழுக்களின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலில் பெஹ் லுகான் உயிரிழந்தார். தேசிய மனித உரி மைகள் ஆணையம் ராஜஸ்தான் மாநில அரசின் முதன்மைச் செயலாளருக்கு அந்நிகழ்வு குறித்தும், அதன்மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள்குறித்தும் விரிவான அறிக்கையை அளிக்குமாறு உத்தரவு பிறப் பித்து அறிவிக்கையை அனுப்பியுள்ளது.

அதேபோன்று, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை களைக் குறிப்பிட்டு நான்கு வாரங்களுக்குள் பதிலை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமது அறிவிக்கையில் குறிப்பிடும்போது,

“இந்நிகழ்வு மனித உரிமைகளை மீறு கின்ற மிகவும் மோசமான பிரச்சினையாகும். தாங்களாகவே தங்களை பசுப்பாதுகாவலர்கள் என்று அறிவித்துக்கொள்பவர்கள் சட்டத்தை  தங்களின் கைகளில் தாமாக எடுத்துக்கொண்டு சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கி வருகின்றனர். இதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண் டும் நடைபெறாத அளவுக்கு எச்சரிக்கை யுடன் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வு நடப்பது முதல் முறையல்ல, இப்போதுதான் அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற ஒரு நிகழ்வு கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் குஜராத் மாநிலத்தில் கிர் சோம்நாத் மாவட் டத்தில், நான்கு தாழ்த்தப்பட்ட இளை ஞர்கள் மாட்டிறைச்சியை வைத்திருந்தார்கள் என்கிற காரணத்தால் கடுமையாகத் தாக்கப் பட்டனர். இதுபோன்ற நிகழ்வுகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கும் வந்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner