எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டெகராடூன் ஏப்ரல் 8 வந்தேமாதரம் பாட்டை பாடுவதற்கு விருப்பமில்லாத மாணவர்கள் மாநிலத்தை விட்டு வெளி யேறவேண்டும் என்று உத்தராகண்ட் மாநில கல்வி அமைச்சர் தன்சிங் ராவத் மிரட்டியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத் துவ சக்திகளும், மதவாத குழுக்களும் தங்களின் கொள்கைகளை வலிந்து பிறரின் மீது திணித்துவருகின்றன. உத்தர காண்ட், உபி, போன்ற மாநிலங்களில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் இந்தியாவில் இருக்க வேண்டுமென்றால் சூரியவணக்கம் செய்யவேண்டும், மாட்டிறைச்சி சாப் பிடக்கூடாது, கிருஷ்ணனையும் ராம னையும் தங்கள் தெய்வமாக வணங்க வேண்டும் என்று பாஜகவின்  பல்வேறு தலைவர்கள் கூறிவந்தனர். இந்த நிலை யில் உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இதனை அடுத்து சட்டதிட்டத்திற்கெல்லாம் பயப்படாமல் இந்துத்துவ சில்லறை அமைப்புகள், பாஜக கட்சியினர் பேசிவருகின்றனர்.

உத்தரகாண்ட் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரும் தன்சிங் ராவத் உத்தரகாண்ட் மாநில தேர்தலில் வென்று பாஜக அமைச்சரவையில் கல்வி அமைச் சராக பொறுப்பேற்றார். இவர் பல்வேறு வகையில் கல்வியை காவிமயாக்கும் முயற்சியில் பதவியில் ஏற்றதில் இருந்தே இறங்கிவிட்டார். முக்கியமாக காந்தியார் கொலை, நேருவின் விவசாயப் புரட்சி மற்றும் தொழிற்புரட்சி பற்றிய பாடங்கள் எடுத்துவிட்டு, சாவர்கர், மதன்மோகன் மாளவியா, தீன்தயாள் உபாத்தியா போன்றோரின் வரலாறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த கல்வி யாண்டில் உபி மற்றும் உத்தரகாண்டில் முற்றிலும் மாறுபட்ட பாடத்திட்டம் கொண்டுவர பணிகள் வேகவேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் வந்தே மாதரம் குறித்த சர்ச்சையை கிளப்பி யுள்ளார். இந்திய தேசியகீதமான ஜன கனமன இல்லாமல் வந்தே மாதரம் பாடவேண்டும் என்று ஏற்கெனவே இந் துத்துவ அமைப்புகள் இஸ்லாமியர் களுக்கு எதிரான ஒரு போக்கை கடை பிடித்தனர். வந்தே மாதரம் என்பது சரஸ்வதியை நோக்கி பாடவேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் கொள்கையாகும், தற்போது உத்தர காண்ட் பள்ளிகள் கல்லூரிகளில் காலை 10மணி மற்றும் மாலை 4 மணிக்கு வந்தே மாதரம் பாடவேண்டும் என்பது தற்போது உத்தரகாண்டில் சட்டமாகி யுள்ளது. இது குறித்து கல்லூரி விழா ஒன்றில் பேசிய உத்தரகாண்ட்  கல்வி அமைச்சர்  தான்சிங் ராவட், ரூர்கியிலி ருக்கும் தனியார் கல்லூரி பள்ளி, கல் லூரிகளில்  காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் தேசியகீதம் பாடுவ தற்கான நேரம் என வரையறுக்கப் பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மாண வர்கள் வாழ விரும்பினால் வந்தே மாதரம் பாட வேண்டும், இல்லையென் றால் வெளியேறிவிட வேண்டும் என மாணவர்களைப் பார்த்து மிரட்டியுள் ளார். இவர் முன்னாள் ஆர் எஸ் எஸ் செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner