எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவனந்தபுரம், ஏப்.8 கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள துறவூர் பகுதியை சேர்ந்தவர் அனந்து (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

அந்த பகுதியில் நடந்த கோவில் விழாவுக்கு அனந்து வும் அவரது நண்பர்கள் சில ரும் சென்றனர். அப்போது அனந்துவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசியவர்கள் அவரை கோவில் அருகே உள்ள ஒரு தோப்புக்கு வரும்படி கூறி உள்ளனர்.

இதை அவர் தனது நண் பர்களிடம் கூறி அவர்களையும் அழைத்துக் கொண்டு அந்த தோப்பை நோக்கி சென்றார். அப்போது அங்கு ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது.

அந்த கும்பலை பார்த்ததும் சந்தேகம் அடைந்த அனந்துவும் அவரது நண்பர்களும் அங்கி ருந்து தப்பி ஓடினார்கள். ஆனா லும் அந்த கும்பல் அவர்களை ஓட, ஓட விரட்டியது. இதில் அனந்து அவர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட் டனர்.

அனந்துவின் நண்பர்கள் ஊருக்குள் சென்று நடந்த விவ ரங்களை கூறி அங்கு பொது மக்களை திரட்டிக் கொண்டு வந்தனர். மேலும் இதுபற்றி காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று மாணவர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத் தனர்.

மேலும் இதுபற்றி அனந் துவின் நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத் திய போது பள்ளிக்கூடத்தில் அனந்துவுக்கும் சில மாண வர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் நடந் ததாகவும், இதன் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் தெரியவந்தது.

இதுபற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி மாணவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் பள்ளி மாண வர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து  ஆலப்புழா மாவட் டத்தில் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. இதனால் அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner