எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுச்சேரி, ஏப்.9 புதுவை நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார்.

அதையடுத்து அதிகாரி சந்திரசேக ரனை காத் திருப்போர் பட்டியலில் வைக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.

அதன்படி சந்திரசேகரன் காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய ஆணையராக கணேசன் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்வதாக ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார். ஆனா லும், அந்த உத்தரவு நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் தலைமை செயலாளர் தனது உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுப்பதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி மத்திய உள்துறைக்கு புகார் அனுப் பினார்.

மேலும் தலைமை செயலாளர் குறித்து டுவிட்டர் தளத்தில் விமர்சித்து இருந்தார். அதில், தலைமை செயலாளர் பொறுப்பற்று, முதிர்வு இல்லாத வகை யில் நடந்து கொள்வதால் புதுவையில் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருந்தார்.

இது தொடர்பாக தலைமை செயலா ளர் மனோஜ் பரிதா ஆங்கில பத்திரி கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்த விஷயத்தில் ஆளுநர் என்னிடம் விதிகள் தொடர்பாக சரியான தகவல் களை எனக்கு அளிக்கவில்லை. மேலும் அவர் குறிப்பிட்டு இருந்த விதிகள் தவறானதாகும். மத்திய உள்துறையும் இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

தலைமை செயலாளர் என்ற முறை யில் எந்தவொரு அதிகாரியையும் தற்கா லிகமாக பணி நியமனம் செய்யவும், மாற்றவும் எனக்கு முழு அதிகாரம் உள்ளது. நான் இதுபோன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்த விஷயத்தைப் பொருத்த வரை விதிகள் தெளிவாக இருக்கின்றன. சபாநாயகர் உத்தரவிட்டால் அதை அமல்படுத்த வேண் டும் என்று விதி சுட்டிக் காட்டுகிறது. அதைத்தான் நான் செய்தேன்.

ஆனால், ஆளுநருக்கு சரியாக விதிகள் தெரியவில்லை. அவர் தவறான விதிகளை குறிப்பிட்டு சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இவ்வாறு தலைமை செயலாளர் மனோஜ் பரிதா கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner