எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஏப்.9  உலக அளவில் ஊழல் செய்யும் நாடுகளில் இந்தியா 9ஆவது இடத்தில் இருப்பதாக ஆய் வில் தெரிய வந்துள்ளது.

வர்த்தகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடக்கும் நாடுகள் குறித்து உலக அளவில் தன்னார்வ நிறுவனம் ஒன்று சர்வே நடத்தியது. இந்த சர்வேயில் 41 நாடுகளில் வர்த்தகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடப்பது தெரியவந்துள்ளது. இதில் இந்தியா 9ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

அய்ரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா, ஆப்பிரிக்கா ஆகிய வற்றில் உள்ள நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 78 சதவீதம் பேர் வர்த்தக விவகாரங்களில் முறை கேடுகள் மற்றும் ஊழல் நடப்பதாக தெரிவித்துள்ளனர். உக்ரேன், சிப்ரஸ், கிரீஸ், ஸ்லோவேனியா, குரேஷியா, கென்யா, தென் ஆப்ரிக்கா, ஹங் கேரிக்கு அடுத்தபடியாக இந்தியா அந்த இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் 6ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 9ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. தங்களது பணியை மேம்படுத்துவதற்காக முறைகேடான வழிகளை பின்பற்று வதாக 41 சதவீதம் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner