எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தாம்பரம், ஏப்.9  சென்னை சேலையூர் அடுத்த சந்தோஷ புரம், விசாலாட்சி நகர், கலைஞர் கருணாநிதி சாலையை சேர்ந்தவர் ஞானதாஸ் (43).  இவர், சார்மினார் பந்தல் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை கௌரி வாக்கத்தில் உள்ள பஞ்சமுக அஞ்சநேயர் கோயில் நிகழ்ச் சிக்காக அலங்கார கொடி, பந்தல் அமைத்துக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால்வழுக்கி சுமார் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், ஞான தாஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத் திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார். தகவலறிந்து வந்த சேலையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner