எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஏப்.9 உத்த ரப்பிரதேச மாநிலம் முசா பர் நகர் மாவட்ட நீதிமன் றத்தில் குடும்ப நல நீதிபதி யாக பணியாற்றி வரும் தேஜ் பிரதாப் சிங், கடந்த ஆண்டில் 327 வேலை நாட் களில் 6,065 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இடையில், அம்மாவட்டத்தில் வழக்கு ரைஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்திய போதிலும் அச ராமல் தனது கடமையை ஆற்றியுள்ளார் தேஜ் பிரதாப் சிங். நாட்டில் மிக அதிகமான வழக்குகளுக்கு தீர்வு வழங்கிய நீதிபதி பிரதாப் சிங்-கின் இந்த சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்து உள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரதாப் சிங் ,நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க வேண்டும் மற்றும் வழக்காளி களுக்கு சரியான தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner