எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலை 140 அடி திருச்சி சிறுகனூரில் அமைக்கும் பணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று (9.4.2017) காலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டார். தந்தை பெரியார் சிலை அமைக்கப்படவிருக்கும் இடத்தில் பத்தாயிரம் (100 ஙீ 100) சதுர அடி பரப்பளவில் அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 11 அடி ஆழத்தில் பள்ளம் எடுக்கப்பட்டு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழர் தலைவர் அவர்கள் அந்த  பள்ளத்தில் உள்ளே இறங்கி சுற்றி பார்வையிட்டு அங்கு அமையும் தளம் குறித்து கேட்டறிந்து 40 அடி உயரத்தில் பீடம் மட்டும் அமையவுள்ளது - அமைக்கப்படும் முறையினை கேட்டறிந்து இது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று சில ஆலோசனைகளை வழங்கினார். பள்ளத்தில் எடுக்கப்பட்ட மண்ணை பாதை அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். அங்கு பெரியார் உலகம் திடலில் அமைக்கப்பட்ட 32 கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார். பெரியார் உலகம் முழுவதும் இயற்கை சூழல் அமையும் நோக்கில் பசுமை  செடிகளையும், பூஞ்செடிகளையும் முழுவதுமாக வைத்து பூச்சோலையாக மாற்றி அந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார். பெரியார் உலகம் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவாக நடைபெறவேண்டும் என்ற முறையில் ஆயத்த பணிகளை தமிழர் தலைவர் மேற்கொண்டு வருகிறார். உடன்: இலால்குடி ஆல்பர்ட், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் ப. சுப்பிரமணியம், பொறியாளர்கள், காவலர்கள் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner