எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் விரிவாக் கத் திட்டங்களில் ரூ.4,300 கோடியை முதலீடு செய்ய உள்ளது.

இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்ததாவது:

தொலைத் தொடர்புத் துறையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்க ளுக்குப் பல்வேறு சலுகைக ளையும் வழங்கி வருகிறது.

வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்காக ஏற்கெனவே 5,000 ‘வை-ஃபை ஹாட்ஸ்பாட்’ மையங்கள் தொடங்கப்பட் டுள்ளன. நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக 35,000- ஹாட்ஸ்பாட் மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 600 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. அதன் மூலம், வாடிக்கையாளர்கள் தரமான தொலைத்தொடர்பு சேவைக ளைப் பெற முடியும்.

இந்தியாவில் கடந்த கால டேட்டா பயன்பாடுகளைப் பார்க்கும்போது, அதன் பயன் பாட்டில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, சீனா ஆகிய நாடு களை விரைவில் விஞ்சி விடு வோம்.

முன்பு ஒரு ஜிபி டேட்டா ரூ.200-க்கு கிடைத்து வந்த நிலையில் தற்போது அதற்கான கட்டணம் ரூ.10 என்ற அளவில் தான் உள்ளது. இது வாடிக்கை யாளர்களுக்கு மிகுந்த பயன ளிக்க கூடியது என்றார் அவர்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத் தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனுபம் சிறீவாஸ்தவா கூறியதாவது:

பி.எஸ்.என்.எல். தேவைக் காக 20,000 ஹாட்ஸ்பாட் மையங்களை எல் & டி நிறுவன மும், 15,000 மையங்களை எச். எப்.சி.எல். நிறுவனமும் உரு வாக்க உள்ளன. அதற்கான ஒப்பந்தங்களை அந்த நிறுவ னங்கள் பெற்றுள்ளன. அடுத்த நிதி ஆண்டில் ஹாட்ஸ்பாட் மையங்களைக் குறைந்த செல வில் 100 சதவீதம் விரிவாக்கம் செய்வதே இலக்கு. நடப்பு நிதி ஆண்டில் விரிவாக்கத் திட்டங் களுக்காக ரூ.4,300 கோடியை முதலீடு செய்ய உள்ளோம். ஆண்டுக்கு ரூ.4,000 கோடி அள விலான முதலீட்டை சொந்த வளங்களைப் பயன்படுத்தியே மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner