எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம் ஒரே நாளில் 900 விமான சேவைகள் வழங்கி சாதனை படைத்தது.

இந்திய விமான சேவை வர லாற்றில் ஒரு நிறுவனம் ஒரே நாளில் இத்தனை முறை விமா னங்களை இயக்குவது இதுவே முதல் முறை. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவ ரும், முழு நேர இயக்குநருமான ஆதித்யா கோஷ் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இண்டிகோ நிறுவனம் ஏப்ரல் 7-ஆம் தேதி 900 சேவைகளை இயக்கியது. தற்போது, எங்களது நிறுவனம் விமான சேவையில் 1,000 என்ற இலக்கை எட்ட மிகவும் ஆவலுடன் உள்ளது என்றார் அவர். இண்டிகோ நிறுவனம் தற்போது 131 ஏர்பஸ் விமா னங்கள் மூலம் 44 நகரங்களுக்கு விமான சேவை அளித்து வருகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் மளிகை விற்பனையில் பிளிப்கார்ட்

மளிகை பொருள் விற்பனை யில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டிருக்கிறோம் என பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்தியாவில் மளிகை பொருட்களின் சந்தை மதிப்பு 40 கோடி டாலர் முதல் 60 கோடி டாலர் வரை இருக்கும். அதனால் இந்த துறையில் களம் இறங்குகிறோம் என தெரிவித்தார்.

கையகப்படுத்தல் குறித்த கேள்விக்கு, நாங்கள் பரிசீல னையில் இருக்கிறோம். நிறு வனத்தின் அளவு முக்கியமல்ல, நாங்கள் சிறிய நிறுவனங்க ளையும் கையகப்படுத்தி இருக் கிறோம், மிந்திரா, ஜபாங் ஆகிய நிறுவனங்களையும் கையகப்படுத்தி இருக்கிறோம் என தெரிவித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு அக் டோபர் மாதம் நியர்பை என் னும் பெயரில் மளிகைபொருட் கள், காய்கறிகள் மற்றும் பழங் களை பிளிப்கார்ட் விற்றுவந் தது. ஆனால் வாடிக்கையாளர் களிடம் பெரிய வரவேற்பு இல் லாததால் அடுத்த சில மாதங் களில் அந்த பிரிவினை பிளிப் கார்ட் மூடியது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner