எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திடீர் பிள்ளையார் அகன்றதுகிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் மத்திய - மாநில அரசு ஆணைகளுக்குப் புறம்பாக சட்ட விரோதமாக வைக்கப்பட்ட திடீர் பிள்ளையார் சிலையை அகற்றக்கோரி கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த 27.03.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட இணை இயக்குநர், வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு அரசு ஆணைகளையும், நீதிமன்ற தீர்ப்பு நகலையும் இணைத்து மாவட்டச் செயலாளர் கோ. திராவிடமணி, மாவட்ட இளைஞரணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே. புகழேந்தி, காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் சி. சீனிவான், ஒன்றியச் செயலாளர் சிவ. மனோகர் ஆகியோர் நேரில் சென்று சட்ட விரோத திடீர் பிள்ளையார் சிலையை உடனடியாக அகற்ற கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 7.4.2017 இரவு கிருட்டிணகிரி வருவாய்  கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் சட்ட விரோத திடீர் பிள்ளையார் சிலை அகற்றப்பட்டது. 8.4.2017 சனிக்கிழமை நகர் முழுவதும் காவல்துறை முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். கழகத் தோழர்களின் அமைதியான சட்டபூர்வமான நடவடிக்கையை பொது மக்கள் பாராட்டினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner