எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஏப்.10 மயி லாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் விழாவை காண நேற்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இத னால், காலை முதலே மயி லாப்பூர் பகுதிகள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமிருந்தன.

சரியாக 3 மணியளவில் அறுபத்து மூவர் விழா தொடங் கியது. அந்த நேரத்தில் பக் தர்கள் ஒரே இடத்தில் கூடினர். இந்த கூட்ட நெரிசலை பயன் படுத்தி கொண்ட திருட்டு கும் பல் செயின் பறிப்பில் ஈடுபட் டுள்ளது. குறிப்பாக, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கலாவதி (65) என்பவரின் 2 சவரன் நகையும், அனகாபுத்தூரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடம் 3 சவரன் தங்க நகையையும் பறித்து சென்றனர்.  புகாரின்படி மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner