எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இந்துத்துவா கண்ணோட் டத்தில் பிள்ளைகளைப் பெற்ற மாதா (தாய்) முக்கியமா? கோமாதா (பசு - தாய்) முக்கியமா என்று கேட்டால், கோமாதாதான் முக்கியம்.

மக்களைப் பெற்ற தாய் மார்கள் - பெண்கள் அல்லவா - பெண்கள் என்றால் இந்து மதக்கண்ணோட்டத்தில்- அதுவும் அவர்களின் கடவு ளான ‘பகவான் கிருஷ்ணன்’ அருளியதாகக் கூறப்படும் கீதையின் கூற்றுப்படி பாவ யோனியில் பிறந்தவர்கள் ஆயிற்றே! அதனால்தான் பெண்கள் எக்கேடு கெட்டா லும் அவர்களுக்குக் கவலை யில்லை.

மத்திய தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் ஒரு தகவல் அதிர்ச்சி நெருப் பில் நம்மைத் தள்ளுகிறது.

பிரசவகாலங்களில்மர ணம் அடையும் தாய்மார்கள் பி.ஜே.பி. ஆளும் மாநிலங் களில்தான் அதிகம். 2013-2014 ஆம் ஆண்டில் 72 என்று இருந்த மரணம், 2014-2015 இல் 80, 2015-2016 இல் 85 என அதிகரித்துள்ளது.

குஜராத்தில் வேறு சில பகுதிகளில் வல்சாந்த் (94), டஹோத் (93), சூரத் (89) பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசத்தில் 221, ராஜஸ்தான் 244 என்று சி.ஏ.ஜி.யின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மனிதத்தாய்களைக்காப் பாற்ற வக்கில்லாத பி.ஜே.பி. அரசு, மாட்டுத் தாய்களைக் காக்ககச்சைகட்டிக்கொண்டு நிற்கிறது. பசுவைக் காப்பாற்று கிறோம் என்று சொல்லி, மனி தர்களை அடித்துக் கொல்லு கிறார்கள் சிஷீஷ் பிஷீறீஹ், விணீஸீ ஹிஸீலீஷீறீஹ் என்ற முழக்கங்களை வைக்கிறார்கள்.

அரியானாவில் செத்துப் போன பசுவின் தோலை உரித்த அய்ந்து தாழ்த்தப்பட்ட தோழர்களைக் கொன்றது இந்த சங் பரிவார்க் கூட்டம். உத்தரப்பிரதேசத்தில் குளிர் சாதனப் பெட்டியில் (ஃபிரிட்ஜ்) பசு மாட்டிறைச்சி வைத்தி ருந்ததாகக் கற்பனை செய்து அக்லக் என்னும் முசுலிம் பெரியவரை அடித்துக் கொன்றது இந்த இந்துத்துவா கொலை வெறிக் கூட்டம்.

ராஜஸ்தானில் பகலுகான் என்ற பால் வியாபாரியை வெட்டிக் கொன்றதும் இந்தக் கூட்டம்தான்.

இப்பொழுது சொல்லுங்கள், இந்துத்துவா ஆட்சியில் மனி தர்கள் முக்கியமா? மாடுகள் முக்கியமா?

இன்னொருகூடுதல் தகவல்:

பிரசவத்தில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். ஒரு லட்சத்துக்கு 167 பேர் மரணம்; சீனாவிலோ 27; ஈரானில் 23; இலங்கையில் 29, மாலத்தீவில் 31.

பாரத மாதா நிலையைப் பார்த்தீர்களா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner