எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு...

இணை ஆணையரின் சிறப்பான உத்தரவு

பெங்களூரு, ஏப்.12 பெங்களூரு நகரில் பாது காப்பு பணியில் ஈடுபடும் சிவில் மற்றும் சி.ஏ.ஆர். பிரிவு காவல்துறையினர் நெற்றியில் விபூதி, குங்கும், காதுகளில் கடுக்கன் அணிவது, கைகளில் பக்திக் கயிறு கட்டிக்கொள்வது ஆகியவற்றுக்குதடைவிதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு நகர காவல்துறை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் கிஷோர் பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:

பெங்களூரு நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிவில் மற்றும் சி.ஏ.ஆர்.  பிரிவு காவல் துறையினர் பணியில் ஈடுபடும்போதோ அல்லது உயர் அதிகாரிகளை காணச்செல்லும் போதோ நெற்றியில் குங்குமம், விபூதி அணிந்து செல்லக் கூடாது. இதேபோல் காதுகளில் கம்மல், கடுக்கன் போன்றவற்றையும் அணியக்கூடாது. மேலும், கைகளில் பக்திக் கயிறு கட்டிக்கொள்ளக் கூடாது. குறிப்பாக தலை முடியை சரியாக திருத்தம் செய்திருக்கவேண்டும்.

காவல்துறையினர் நெற்றியில் குங்குமம், விபூதி இடுவது கொள்கைக்கு விரோதமானது மட்டுமன்றி காவல்துறையின் இயலாமையை காட்டுகிறது. எனவே காவல்துறையில் இருப்போர் நடுநிலையாளர்கள் என்பதையும், மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையும் காட்டவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் என்றாலே நடுநிலையான வர்கள் என்பதை குறிக்கும். காவல்துறை சட்ட விதிப்படி பெண் காவல்துறையினரும் வளையல், கம்மல் போன்றவைகளை அணியக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, காவல் துறையின் சட்ட விதிகள்படி உயரதிகாரிகள் ஆண்காவல்துறையினர்மட்டுமன்றிபெண் காவல்துறையினருக்கும்பாதுகாப்புஅளிக்கும் கடமை உண்டு. குறிப்பாக வகுப்புக் கலவரங் களின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் குங்குமம், விபூதி இட்டுக் கொள்வது, கம்மல், கடுக்கன் அணிவது, கைகளில் கயிறுகட்டுவது போன்றவற்றை தடுக்கவே காவல்துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நகர காவல்துறை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் கிஷோர் பாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner