எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆசாம்கான் உ.பி. சமாஜ்வாடிக் கட்சியின் முக்கிய தலைவர்.

இவருக்கு கோவர்த்தன பீட சங்கராச்சாரியார் அசோக்சானந்தா மகராஜ் 2015 ஆம் ஆண்டில் பசு மாடு ஒன்றை அளித்திருந்தார். நல்ல முறையில் பிரியமுடன் அதனை வளர்த்து வந்தார்.

அந்தப் பசுவை கோவர்த்தன பீடாதிபதிக்கு இப்பொழுது திருப்பி அனுப்பி விட்டார். காரணம் என்ன சொல்லுகிறார், ஆசாம் கான்?

இப்பொழுது உ.பி.யில் சாமியார் ஆதித்யநாத் தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி அமைத்துள்ளது. பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், என்னிடம் உள்ள பசுவை அவர்களே கொன்றுவிட்டு என்மீது பழியையும் போட்டு விடுவார்கள்.

எனவே, திருப்பி அனுப்புவதாகக் கூறியுள்ளார்.

நாடு எங்கே போகிறது பார்த்தீர்களா?

-----------------

மத்திய அரசு மிரட்டல்!
டில்லியில் போராடும்
தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி!

புதுடில்லி, ஏப்.12 விவசாய பிரச்சினைகளுக்குத் தீர்வை எதிர்ப்பார்த்து டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை மத்திய அரசு கடுமையாக மிரட்டியுள்ளது.

29 ஆவது நாளான நேற்று (11.4.2017) மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடத்திய விவசாயிகளை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைத்துப் பேசினார்.  இந்த சந்திப்பில் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.  மனுவைபெற்றுக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், நாளை (இன்று 12.4.2017) நல்ல முடிவை சொல்கிறேன் என்று அனுப்பிவைத்தார்.
நல்ல முடிவு வரும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு திரும்பியவர்களுக்கு நள்ளிரவில் அதிர்ச்சி தரும்படியாக மத்திய அரசிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது.  போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.  இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளதை நினைத்து அதிர்ந்து போயிருக்கின்றனர் விவசாயிகள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner