எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குச் சட்ட வலிமை வரவேற்கத்தக்கது

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தயாரிக்கும் உரிமை மாநிலத்தைச் சார்ந்ததே!

மாநிலங்களவையில் இதுகுறித்த சர்ச்சையும் யோசனையும் சரியானதே!

பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்திற்குச் சட்ட வலிமை அளிக்கும் மசோதா பற்றி - மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாதிகளின் சேர்க்கை, நீக்கம் என்பதெல்லாம் மாநில அரசுகளின் உரிமை - புதிய மசோதா அந்த உரிமையைப்  பறிக்கும் நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினர்கள்  மசோதாவை செலக்ட்  கமிட்டிக்கு அனுப்பக் கோருவது சரியான நடவடிக்கையே! பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவை உறுப்பினர்களைச் சாடுவது சரியானதல்ல. மாநில அரசுகள் இந்த முக்கியப்பிரச்சினையில் தக்காரைக் கொண்டு ஒரு கருத்துருவை உருவாக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அடல் பிகாரி வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்த காலந் தொட்டு, நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலன் பாதுகாக்கப்பட, சமூக நீதி அமைப்புகள் கோரிவந்துள்ளன.

தாழ்த்தப்பட்டோர் நலக்குழு இந்திய அரசியல் சட்டத்தின் 338ஆம் பிரிவு ஒரு அரசியல் சட்டத் தகுதியுடன் கூடிய தேசியக் கமிஷனாக எப்படி இருக்கிறதோ, அதுபோன்றே, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலக்கமிஷனும் அமைக்கப்பட அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, புதிய பகுதிகள் இணைக்கப்படல் வேண்டும் என்றும், அதற்கு முதற்கட்டமாக பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு, பார்லிமெண்டரி நலக்குழு அமைக்கப்படல் வேண்டும் என்பதற்காக பல மாநாடுகள், போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன.

நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு_அரசியல் சட்ட அதிகாரமற்ற குழுவாக இருந்து வருகிறது. எனவேதான், அரசியல் சட்டத்தினைத் திருத்தி, புதிதாக அரசியல் சட்டத் தகுதியுடன் கூடிய தேசிய கமிஷன் அமைக்கும் கோரிக்கை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளைத் தாண்டி, பிற்படுத்தப்பட்டோரின் குரல் தொடர்ந்து ஒலித்து வந்துள்ளது.

மக்களவையில் நிறைவேற்றம்

அதன்விளைவாக, அதனை இனிமேலும், தள்ளிவைத்தால் ஆளும் பாஜகவிலிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆதரவையும்கூட இழக்க நேரிடுமோ என்ற நிலை உருவாகியுள்ளது. குஜராத், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் முறையே பட்டேல் - ஜாட் போராட்டங்கள் ஒருபுறம் உலுக்கும் நிலை  அங்கே - அடுத்து தேர்தலும் குஜராத்தில் என்பதாலும், இந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்கவேண்டிய அவசியம் பி.ஜே.பி.,க்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பேச்சால் இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு ஆபத்து எந்த ரூபத்தில், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற பரவலான பலத்த சந்தேகம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில், தங்கள் அரசைப் பலப்படுத்தும் ஒரு உத்தியாக ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தினை-தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினை நியமிக்க 123 ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதாவை சமூக நலத்துறை அமைச்சர் தவார்ச்சந்த் கேலட் அவர்கள் மக்களவையில் தாக்கல் செய்து சிலரின் சந்தேகங்கள் புயலாக எழுந்தபோதிலும், மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில் அதுபற்றிய விவரமான கேள்வி கள் அனைத்துதரப்பிலும் எழுப்பப்பட்டு, அம்மசோதாவை நிறை வேற்றாமல்,  செலக்ட் கமிட்டிக்கு (ஷிtணீஸீபீவீஸீரீ சிஷீனீனீவீttமீமீ) விட்டுள்ளனர்.

இதுதான் சரியான நிலைப்பாடு; காரணம் பல திருத்தங்கள்- தெளிவு படுத்தப்பட வேண்டியவை அதில் உள்ளன.

எடுத்துக்காட்டாக, குறிப்பாக அம்மசோதாவில் உள்ள புதிதாய் இணைக்கப்படும் 342 ஏ பிரிவு பல சர்ச்சைகளை உருவாக்கும் தன்மையதாய் உள்ளது.

மாநில அரசுகளின் உரிமைப் பறிப்பு!

குறிப்பாக இம்மசோதா சட்டமானால், மாநில அரசுகள் தற்போது பெற்றுள்ள பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு கூறும் சட்ட உரிமையை இழக்க வேண்டிவருவதோடு, மத்திய அரசுக்கு மட்டும்தான் பிற்படுத்தப்பட்டவர் பட்டியல் இறுதி செய்யும் உரிமை சென்றுவிடும்.
தற்போது எப்படி தாழ்த்தப்பட்டோருக்கு பட்டியலில் புதிதாக சேர்க்கவோ, நீக்கவோ மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளதோ, அதேநிலை புதிதாக மாநில உரிமைகளைப்பறிக்கும் நிலை பிற்படுத்தப்பட்டோருக்கும் ஏற்படும்.

பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், ஙிசி, விஙிசி என்று உண்டே!

அவைகளின் உரிமை - கேள்விக்குறியாகும் அபாயமும் ஏற்படக்கூடும்.

ஏற்கெனவே உள்ள 1993ஆம் ஆண்டின் சட்டப்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை என்பது, இப்புதிய திருத்தத்தில் இல்லை.

எனவே இவைகளால்தான் இப்போது எதிர்க்கட்சிகள் மாநிலங் களவையில் எதிர்த்து, நிலைக்குழுவுக்கு அனுப்பியுள்ளனர். அதுதான் சரியானது.

பிரதமர் மோடியின் குதர்க்கம்!

ஏதோ எதிர்க்கட்சியினர் நிறைவேறாதபடிச் செய்து விட்டனர் என்று திசைதிருப்பும் வகையில்எதிர்க்கட்சிகள் ஏன் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று பிரதமர் மோடி பேசுவதை வைத்து  பிற்படுத்தப்பட்டோரில்- நுனிப்புல் மேயும் பலரால்-  கேள்வி எழுப்பப்படுகிறது. அது அவர்களின் அரசியல் தந்திர வியூகம்.

விரிவான செலக்ட் கமிட்டி - விவாதம் செய்து இறுதிசெய்து நிறைவேற்ற வேண்டும்.

குறட்டை விடக்கூடாது மாநில அரசுகள்!

மாநில முதல்வர்கள் இதுபற்றி கண்டும் காணாமல் இருப்பதோ, குறட்டை விட்டுக் கொண்டிருப்பதோ கூடாது!

நம் மாநிலத்தில் இதற்கென விரைவில் தக்காரைக்கொண்டு ஒரு கருத்திணக்கம் உருவாக்க வேண்டியது அவசியம்.

சென்னை                                                                                    தலைவர்
13.4.2017                                                                               திராவிடர் கழகம்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner