எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கொல்கத்தா, ஏப். 13
பயங்கரமான ஆயுதங்களுடன் ஊர்வலம் வந்த காவிகளை அடித்துவிரட்டிய காவல்துறையினரின் செயலைக் கண்டித்த பாஜக இளைஞரணித் தலைவர், காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் மம்தா பானர்ஜியின் தலையைக் கொய்துவருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கூறி சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளார்.

ராமநவமி விழாவன்று ஆயுதங்களுடன் பேரணி செல் வோம் என்று கூறியவாரே மேற்குவங்க பாஜகவினரும், காவி அமைப்புகளும் பயங்கர ஆயுதங்களுடன் காக்ராபூர், சிலிகுரி, ராம்பூர், பர்கத்பூர் போன்ற நகரங்களில் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் அவர்கள் அத்துமீறி ஊர்வலம் சென்றனர். இதனை அடுத்து மாநிலம் முழுவதும் 27 நகரங்களில் பாஜக மற்றும் காவி அமைப் பினர்மீதுவழக்குகள்பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் மீண்டும்காவிக்கும்பல்செவ் வாயன்றுஅனுமன்ஜெயந்தி யைக்கொண்டாடஆயுதங்களு டன் ஊர்வலம் வர ஆயத்தமா யின.இந்நிலையில்பக் கத்து மாநிலமான ஒடிசா போன்று இங்கும் வன்முறை நிகழ்ந்துவிடாமல்இருக்க காவல்துறையினர் முன்னெச்ச ரிக்கைநடவடிக்கையாகஆயு தங்களுடன் பேரணி சென்றவர் களை தடுத்து நிறுத்தினர்.
மேற்குவங்க மாநிலம், பிர்புன் பகுதியில் ஆயுதங் களுடன் பேரணியில் வந்த வர்கள், அங்குள்ள இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் இருந்த தெருவுக்குள் வன்முறையாக நுழையமுயன்றனர். இதனை காவல்துறைதடுத்துநிறுத்த முயன்ற போது பேரணியில் வந்த வர்கள் கற்களைக்கொண்டு தாக்குதல்நடத்தினர். இதனை அடுத்து பேரணியில் ஆயுதங்க ளுடன் வந்தவர்கள் மீது தடி யடி நடத்தி பேரணியைக் கலைத்தனர்.

இந்த நிலையில் இது குறித்து உ.பி. மாநிலம் ஆக்ரா வில்ஊடகம்ஒன்றிற்கு பேட்டியளித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்குவங்க பாஜக இளைஞரணித் தலை வருமான யோகேஷ்வர்ஷினி, மம்தா பானர்ஜி காவல் துறையை ஏவிவிட்டு இந்துக்களின்மீது கடுமையான தாக்குதலைநடத்தியுள்ளார்.இந் துக்களின் மீது மிகவும் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் மம்தா பானர்ஜி உயிர்வாழ தகுதியற்றவர், அவரின் தலையை வெட்டி கொண்டுவந்தால் நான் ரூ.11 லட்சம் இனாமாக தரத்தயார் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner