எழுத்துரு அளவு Larger Font Smaller Fontவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த பத்தாண்டு களாக பல்வேறு துறைகளைச் சார்ந்த சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான (2017) விருதுகள் பின்வரும் சான்றோருக்கு வழங்கப்படுகின்றன.

விருதுபெறுவோர் பட்டியல்

1. அம்பேத்கர் சுடர் - மாண்புமிகு நாராயணசாமி அவர்கள், முதல்வர், புதுச்சேரி.

2. பெரியார் ஒளி - தோழர் ஓவியா அவர்கள்

3. அயோத்திதாசர் ஆதவன் - கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், திராவிடர் கழகம்.

4. காமராசர் கதிர் - திரு.ஹென்றி தியாகராசன் அவர்கள், மனித உரிமை ஆர்வலர்.

5. காயிதேமில்லத் பிறை - மவுலவி தர்வேஷ் ரஷாதி, இசுலாமிய விழிப்புணர்வு கழகம்.

6. செம்மொழி ஞாயிறு - தமிழ்த்திரு. இளங்குமரனார் அவர்கள்

விருதுகள் வழங்கும் விழா 4.05.2017 அன்று தேனாம்பேட்டை, காமராசர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner