எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தெற்காசிய நாடுகளுக்காக ஜி சாட் செயற்கைகோள்

மே 5 ஆம் தேதி ஏவுகிறது இஸ்ரோ

அய்தராபாத், ஏப்.15 சார்க் நாடுகளின் கூட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடந்த போது, தெற்காசிய நாடுகள் பயன்பெறும் வகை யில்ஒருசெயற்கைக்கோள் அனுப்பப்படும். இது இந்தியா வின் அண்டை நாடுகளுக்கு பரிசாக இருக்கும் என பிரத மர் மோடி அறிவித்தார். அதன்படி 12 கூ-பாண்ட் டிரான்பாண்டர்களுடன் 2,195 கிலோ எடையில் ஜிசாட்-9 செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது.ஆனால்,இத் திட்டத்தில்இடம்பெற பாகிஸ் தான் விரும்பவில்லை. எனவே, பாகிஸ்தான் நீங்கலாக மற்ற தெற்காசிய நாடுகள் இந்தசெயற்கைக்கோளால்பயன் பெறும். இதில் பங்கு பெறும் நாடுகள் தங்களின் சொந்த உபயோகத்துக்காக தனி டிரான்ஸ் பாண்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். தகவல் தொடர்பு, பேரிடர் உதவி, தெற்காசிய நாடுகள் இடையேயான தொடர்பு, டிடிஎச் உட்பட பல சேவைகளுக்கு இந்த செயற்கை கோளை தெற்காசிய நாடுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஜிசாட் செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி-09 ராக்கெட் மூலம் அரிகோட்டாவில் இருந்து அடுத்த மாதம் 5 ஆம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.


 

உ.பி.,இல் ரயில்

தடம்புரண்டு விபத்து

லக்னோ, ஏப்.15 உத்திரப்பிரதேச மாநிலம்ராம்பூரில் இன்று விரைவுரயிலின்8பெட்டி கள் தடம்புரண்டு விபத்திற் குள்ளாகியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner