எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.15- ஆர்எஸ்எஸ் தலைவர் ரூ17 கோடி கருப்புப்பணம் பதுக்கியதாக வந்த தகவலை அடுத்து அங்கு நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான கருப்புப் பணம் டெபாசிட் செய்திருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு ரூ.500, ரூ.1000 ஆகிய உயர் பணமதிப்பு நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மக்களிடம் இருக்கும் செல்லாப் பணத்தை டிசம்பர் 31-க்குள் மாற்றிக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.

கணக்கில் வராத கருப்புப் பணத்தை மாற்ற மத்திய அரசு  பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் நடத்திய கருப்புப் பணச் சோதனையில் தொடர்ந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிர முகர்கள் பிடிபட்டு வருகின்றனர். கருப்புப் பணச் சோதனையின் தொடர்ச்சியாக  பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸின் டில்லி தலைவர் குல்பூசன் அகுஜா வீடு மற்றும் அவரது நிறுவனங்களில்  வருமான வரித்துறையினரின் சோதனையிட்டனர். அதில்  ரூ.500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.17 கோடியை நவம்பர் 8 ஆம் தேதிக்கு முன்தேதியிட்டு வங்கியில் டெபாசிட் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டில்லி கரோல்பாக், கான்மார்க்கெட், சவுத் எக்ஸ்டேன்சன் ஆகிய முக்கிய இடங்களில்  உள்ள பெரு வணிக நிறுவனங்கள் அகுஜாவிற்குச் சொந்தமானது தான் மேலும் கடைகள் இவருடைய பெயரில் தான் உள்ளது.  கணக்கில் வராத பலகோடி ரூபாய்களை வங்கியில் டெபாசிட் செய்யதுள்ளார். இந்த  ரூபாயும் நவம்பர் 8 ஆம் தேதிக்கு முன் நடைபெற்ற வியாபாரத்தில் கிடைத்த வருமானம் என  போலியான ஆவணங்களை கொண்டு கணக்குக் காட்டியிருப்பதாக  வருமான வரித்துறையினர் கூறினர். இதுவரை செய்த விசாரணையில் 17 கோடி வரை கருப்புப் பணம் பிடிபட்டுள்ளது என்றும், விசாரணையில் இன்னும் அதிக தகவல் வெளிவரலாம் என்று தெரிகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner