எழுத்துரு அளவு Larger Font Smaller Font


‘துக்ளக்‘, 26.4.2017, பக்கம் 33

ஆக, திருவாளர் குருமூர்த்தி அய்யர் தருண்விஜய் பேசியதை வழி மொழிந்திருக்கிறார்.

தென்னாட்டவர்கள் என்று குறிப்பிட்டதையும், கறுப்பர்கள் என்று  தருண்விஜய் நிறவாதம் பேசியதையும் கோயங்கா வீட்டுக் கணக்குப்பிள்ளை நூற்றுக்கு நூறு சரி என்று இந்தக் கார்ட்டூன்மூலம் தனது நெஞ்சில் தேங்கியிருக்கும் பூணூல் நஞ்சைக்  கக்கியுள்ளார்.

வடநாடு - தென்னாடு என்று பிரித்துப் பேசாமல்,

ஆரியர் - திராவிடர் - பார்ப்பான் என்று தருண்விஜய் பேசியிருந் தால் சரி என்று வீரமணி சொல்லியிருப்பார் என்பதுதான் இந்தக் கார்ட்டூன் சொல்லும் கருத்து.

பார்ப்பனர்களுக்கே உள்ள ‘குயுக்தி’ப் புத்தி அவர்களை விட்டுப் போகவே போகாது. இன்னமும் ஆவணி அவிட்டம் என்று பூணூலைப் புதுப்பித்து நாங்கள் பிராமணர்கள் என்று இவர்கள் சொல்லாமல் சொல்லுவதில்லையா?

அதன்மூலம் பூணூல் அணியாதவர்களைச் சூத்திரர்கள் என்று கேவலப்படுத்துவதில்லையா?

இன்னமும் கோவில் கருவறைக்குள் அர்ச்சகராக, எங்களுக்குத் தான் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம்வரை சென்று மார்தட்டுவதில்லையா? சூத்திரன் சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப் பட்டுவிடும்; ஏன், சாமி செத்தே போய்விடும் என்று வைகனாச ஆகமத்தைத் தூக்கிக் கொண்டு போய் உச்சநீதிமன்றத்தில் ஒப்பாரி வைக்கவில்லையா?

இந்தப் பார்ப்பனர்கள் எதையும் செய்யலாம், பார்ப்பனர் அல்லாதாரை அவமதிக்கலாம், இழிவுபடுத்தலாம், அதனைச் சுட்டிக்காட்டினால், எதிர்த்துச் சொன்னால் வீரமணி ‘இனவாதம்‘ பேசுகிறார் என்று முத்திரைக் குத்தினால், அதனால் வீரமணி ஓய்ந்து விடுவாரா?

பார்ப்பனர்களின் இந்தச் சூழ்ச்சியையும் ஒரு படி மேலே சென்று அம்பலப்படுத்தத்தான் செய்வார்.
இப்படியே நையாண்டி செய்துகொண்டே இருங்கள் - இருங்கள்!

233 சட்டமன்ற உறுப்பினர்களுள் தமிழ்நாட்டில் ஒரே ஒரு பார்ப்பான்தான் (அவரும் கொறடா உத்தரவுமீறி நடந்துகொண்டால் வீட்டுக்குப் போகவேண்டியதுதான்).

தமிழ்நாட்டு மக்கள் பார்ப்பனர்களை எங்கே வைக்கவேண்டுமோ - அங்கேதான் வைத்திருக்கிறார்கள். இன்னும் துள்ள துள்ள, பூணூலை முறுக்க முறுக்க - அதன் எதிர்விளைவைத்தான் அனுபவிக்க நேரும் என்பதை மறக்கவேண்டாம்!
ஆரியர் - திராவிடர் என்பது தி.க. கண்டுபிடித்ததா? குருமூர்த்திகளின் குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் ஆரியர்பற்றி பேசவில்லையா?

ஆரியர்கள் என்றால் அறிவில் உயர்ந்தவர்கள் - மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்று எழுதிடவில்லையா?

ஆர்.எஸ்.எஸின் வேத நூலான (Bunch of Thoughts) கோல்வால்கர் எழுதிய நூலைப் படித்துப் பார்க்கட்டும் குருமூர்த்திகள்.

குருமூர்த்திகளின் குடுமிகள் சும்மா இருக்காதுபோலும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner